தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் 14 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் குறித்த முழுமையான தகவல்களை இப்போது பார்ப்போம்.
அந்தவகையில் முதலாவதாக, அறநிலையத்துறையின் பக்தி நூல்கள் பதிப்பிக்கும் பணிகளுக்கும், மூலிகை சுவரோவியங்கள், ஓலைச்சுவடிகள் பாதுகாக்கும் பணிகளுக்கும் தேவையான துணை ஆசிரியர், சுவடியியல் வல்லுநர், கணினி வல்லுநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணிகளுக்கு இந்து சமயத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மார்ச் 3 வரை விண்ணப்பிக்கலாம்.
துணை ஆசிரியர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: எம்.ஏ தமிழ்/ இதழியல்/ தொல்லியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பதிப்பு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம்: 45,000
சுவடியியல் வல்லுநர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டமும், ஓலைச்சுவடி பட்டயச் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். நூலகப் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: 40,000
கணினி வல்லுநர் (வடிவமைப்பு)
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு/ ஓர் ஆண்டு சுவடியியல் பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். DTP, Indesign, Photoshop தகுதி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: 30,000
தொழில் நுட்ப வல்லுநர் (மின்படியாக்கம்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: கணினி பாடப்பிரிவில் இளம் அறிவியல் பட்டம்/ ஊடகம் மற்றும் காட்சி தொடர்பியல், ஓர் ஆண்டு சுவடியியல் பட்டய படிப்பு முடித்திருக்க வேண்டும். மின்படியாக்கத்தில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: 25,000
தொன்மை ஓவியங்கள் ஆய்வு அலுவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: தொல்லியல் / மரபு ஓவியங்களில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பதிப்பு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: 40,000
மரபு ஓவிய புனரமைப்பாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: முதுகலை நுண்கலை பட்டப்படிப்பு. காட்சியக படிப்பு/ புனரமைப்பு மற்றும் ஓவியங்கள் படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: 35,000
ஆய்வுக் கூட உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: 20,000
ஆய்வுக் கூடத்தில் வேதியியல் கருவிகளை சுத்தம் செய்யும் உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: 15,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள், தங்கள் சுயவிவரக்குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் மார்ச் 3 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
முகவரி: தபால் பெட்டி எண்: 3304, தபால் அலுவலர், நுங்கம்பாக்கம் MDO, ஹபிபுல்லா சாலை, (தி.நகர் வடக்கு தபால் அலுவலகம் மேல்மாடி) நுங்கம்பாக்கம், சென்னை - 34.
இந்த அறிவிப்பு தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/182/document_1.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
அடுத்ததாக தூத்துக்குடி அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் ஓட்டுனர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.03.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
ஓட்டுனர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 19,500 – 62,000
அலுவலக உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 4
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 15,700 – 50,000
வயதுத் தகுதி : விண்ணப்பதாரர் 01.01.2024 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினைப் பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.
முகவரி: உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத் துறை, அழகேசபுரம் மெயின் ரோடு, தூத்துக்குடி. - 628001
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.03.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.
/indian-express-tamil/media/post_attachments/99843dfc-a9c.jpg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“