குறைந்த கல்வித் தகுதி போதும்… தமிழக இந்து அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு!

TNHRCE recruitment Chennai Ekambareshwarar temple vacancies apply soon: சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடூ; தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

TNHRCE recruitment Chennai Ekambareshwarar temple vacancies: சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள தட்டச்சர், காவலர் உள்ளிட்ட 9 வகையான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு குறைந்தப்பட்ச கல்வித் தகுதியே போதுமானது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 20.09.2021

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை,3 தங்கசாலை தெரு, சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் கீழ்கண்ட விவரப்படியான காலிப்பணியிடங்களுக்கு தக்கார் தீர்மானத்தின் படி பணியாளர்கள் நியமனம் செய்ய தகுதியுள்ள இந்து மதத்தை சார்ந்த நபர்களிடம் இருந்து 20.09.2021ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர் : தட்டச்சர்

பணியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 1. பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி

2. அரசு தொழில் நுட்ப தட்டச்சர் தேர்வில் தட்டச்சு தேர்வு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

(i) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை (அல்லது)

(ii) தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (அல்லது)

(iii) ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை ஆனால், இனம் (i) ல் குறிப்பிடப்பட்டுள்ள தகுதியை விண்ணப்பதாரர் பெறாத நேர்வில் இனம் (ii)  அல்லது இனம் (iii) ல் உள்ள தகுதிகளை பெற்ற விண்ணப்பதாரர்கள் மேற்சொன்ன முன்னுரிமை வரிசையில் நியமிக்கப்படலாம். கணினி பயன்பாடு மற்றும் அலுவலக தானியக்கத்தில் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.15,300

பணியின் பெயர் : அர்ச்சகர்

பணியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 1. தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

2. யாதொரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகம பள்ளி அல்லது வேதபாட சாலையில் தொடர்புடைய துறையில் ஓராண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.11,600

பணியின் பெயர்: பரிசாரகர்

பணியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும்.

1. தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

2. கோயிலின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நைவேத்யம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்

3. பூஜை மற்றும் சடங்குகள் நடத்துவதற்கான வழக்கமான நடைமுறைகள் அறிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.13,200

பணியின் பெயர் : மேளம் செட்

பணியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 1. தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

2. யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட யாதொரு நிறுவனங்களால் நடத்தப்படும் இசை பள்ளியில் இருந்து இது தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.15,300

பணியின் பெயர் : காவலர்

பணியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.11,600

பணியின் பெயர் : இரவு காவலர்

பணியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.11,600

பணியின் பெயர் : திருவலகு

பணியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.10,000

பணியின் பெயர் : கால்நடை பராமரிப்பாளர்

பணியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :  தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.11,600

பணியின் பெயர் : ஓதுவார்

பணியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 1. தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

2. சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் தேவாரப் பாடசாலையில் இது தொடர்புடைய துறையில் குறைந்த பட்சம் மூன்றாண்டு படிப்பினை மேற்கொண்டதற்காக வழங்கப்பட்ட சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.12,600

வயதுத் தகுதி : 2021 ஜூலை 1 அன்று 18 வயது பூர்த்தியானவராகவும் 35 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் வந்து ரூ.100/- செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும். விண்ணப்பங்களை 20.08.2021 முதல் 20.09.2021 மாலை 5 மணி வரையில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ்களை அரசு பதிவு பெற்ற அலுவலரின் சான்றொப்பத்துடன் இணைத்து கீழ்கண்ட முகவரியில் சமர்பிக்க வேண்டும்.

முகவரி : செயல் அலுவலர், சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், சென்னை – 3

20.09.2021 மாலை 5.45 மணிக்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்களும் தேவையான விபரங்கள் மற்றும் இணைப்புகளுடன் வரப்பெறாத விண்ணப்பங்களும் வேறு வகையில் உருவாக்கப்பட்ட விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும் என இதன் மூலம் தெரிவித்துக்கொள்ள படுகின்றது. இதர விபரங்கள் அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் வந்து தெரிந்து கொள்ள வேண்டும் என உதவி ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tnhrce recruitment chennai ekambareshwarar temple vacancies apply soon

Next Story
நீட் தேர்வு 2021; அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கான தகுதி கட்- ஆஃப் விகிதம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express