தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயிலில் இளநிலை உதவியாளர், உதவி மின் பணியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.10.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: SBI JA 2022; எஸ்.பி.ஐ-யில் 5,008 கிளர்க் பணியிடங்கள்; தகுதி, தேர்வு முறை என்ன? விண்ணப்பிப்பது எப்படி?
இளநிலை உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 18,500 – 58,600
உதவி மின் பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : எலக்ட்ரிக்கல் அல்லது வயர்மேன் பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 16,600 – 52,400
உதவி பரிசாரகர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆகம விதிப்படி நெய்வேத்தியங்கள் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 10,000 – 31,500
ஸ்தானிகம்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆகம பயிற்சி பள்ளிகளில் படித்து ஓராண்டு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 10,000 – 31,500
வயதுத் தகுதி : விண்ணப்பதாரர் 01.07.2022 அன்று 18 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/140/document_1.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.
முகவரி: துணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், சுவாமிமலை
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.10.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/140/document_1.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.