scorecardresearch

அறநிலையத்துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்! உடனே விண்ணப்பிங்க!

இந்துசமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு; சுவாமி மலை சுவாமிநாத சுவாமி கோயிலில் 6 காலியிடங்கள்; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!

அறநிலையத்துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்! உடனே விண்ணப்பிங்க!

தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயிலில் இளநிலை உதவியாளர், உதவி மின் பணியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.10.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: SBI JA 2022; எஸ்.பி.ஐ-யில் 5,008 கிளர்க் பணியிடங்கள்; தகுதி, தேர்வு முறை என்ன? விண்ணப்பிப்பது எப்படி?

இளநிலை உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 18,500 – 58,600

உதவி மின் பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : எலக்ட்ரிக்கல் அல்லது வயர்மேன் பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 16,600 – 52,400

உதவி பரிசாரகர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆகம விதிப்படி நெய்வேத்தியங்கள் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,000 – 31,500

ஸ்தானிகம்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆகம பயிற்சி பள்ளிகளில் படித்து ஓராண்டு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,000 – 31,500

வயதுத் தகுதி : விண்ணப்பதாரர் 01.07.2022 அன்று 18 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/140/document_1.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.

முகவரி: துணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், சுவாமிமலை

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.10.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/140/document_1.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tnhrce swamimalai murugan temple recruitment 2022 apply soon