scorecardresearch

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் 146 பணியிடங்கள்; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்! உடனே விண்ணப்பிங்க!

இந்துசமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு; திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் வேலைவாய்ப்பு; 146 காலியிடங்கள்; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் 146 பணியிடங்கள்; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்! உடனே விண்ணப்பிங்க!

தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் காவலர், துப்புரவு பணியாளர், தூர்வை ஆகிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 146 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

திருச்சி, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் மற்றும் உபகோயில்களான, உறையூர் திருக்கோயில், திருவெள்ளாறை திருக்கோயில், மேலன்பில் திருக்கோயில், கீழன்பில் திருக்கோயில் ஆகியவற்றில் இந்த காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 17.10.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: தெற்கு ரயில்வே வேலை வாய்ப்பு; திருச்சியில் 527 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

காவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 60

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பிரதான கோயில் சம்பளம் : ரூ. 15,900 – 50,400

உபகோயில் சம்பளம் : ரூ. 11,600 – 36,800

துப்புரவு பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 66

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,000 – 31,500

தூர்வை

காலியிடங்களின் எண்ணிக்கை : 20

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,000 – 31,500

வயதுத் தகுதி : விண்ணப்பதாரர் 01.07.2022 அன்று 18 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://srirangamranganathar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளப் பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி – 620006

விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.10.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://srirangam.org/wp-content/uploads/2022/09/VACANCY%20NOTIFICATION%20&%20CONDITIONS.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tnhrce trichy sri rangam temple recruitment 2022 apply soon

Best of Express