இந்துசமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டத்தில் உள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில், அமைக்கப்பட உள்ள முதலுதவி மையத்தில் மருத்துவ அலுவலர், செவிலியர் மற்றும் மருத்துவ பணியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி 22.11.2021. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
மருத்துவ அலுவலர் (Medical Officer)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : MBBS படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 60,000
செவிலியர் (Staff Nurse)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : DGNM படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 14,000
மருத்துவ பணியாளர் (Hospital Worker)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 6,000
தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://drive.google.com/file/d/1L59onIg0PatVCBu7S2HdEPsa0O3k9JYL/view என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், மேல்மலையனூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம் – 604204.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.11.2021
/tamil-ie/media/media_files/uploads/2021/10/Angalamman-Temple-Viluppuram-Recruitment-2021.jpg)
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil