Advertisment

தமிழ்நாடு மீன்வள பல்கலை. வேலைவாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசின் மீன்வள பல்கலைக்கழக வேலைவாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழ்நாடு மீன்வள பல்கலை. வேலைவாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

TNJFU recruitment 2022 for various posts apply soon: தமிழ்நாடு அரசின் மீன்வள பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிகிரி படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Advertisment

தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழத்தின் கீழ் செயல்பட்டு வரும் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், தூத்துக்குடியில் உள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றில் முதுநிலை ஆராய்ச்சி உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர், கள உதவியாளர் உள்ளிட்டப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பட உள்ளன. மொத்தம் 12 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 16.08.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: சென்னையில் மத்திய அரசு வேலை; 12, டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு வாய்ப்பு!

முதுநிலை ஆராய்ச்சி உதவியாளர் (Senior Research Fellow)

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : M.F.Sc. (Fisheries Resource Management / Aquatic Environment Management / Fish Physiology & Biochemistry / Fish Biotechnology), M.Sc. (Marine Biology / Zoology / Biotechnology) படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 35,000

தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 6

கல்வித் தகுதி : M.F.Sc. (Fisheries Resource Management / Aquatic Environment Management / Fish Physiology & Biochemistry / Fish Biotechnology), M.Sc. (Marine Biology / Zoology / Biotechnology) படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 20,000

கள உதவியாளர் (Field Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : B.F.Sc. / B.Sc. (Zoology / Biotechnology / Life Sciences) படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,000

தேர்வு செய்யப்படும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுய விவரக்குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி : sudhan@tnfu.ac.in

விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.08.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.tnjfu.ac.in/downloads/career-pdf/Website%20advertisement%20TANII%20202223%20-%20recruitment.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment