தமிழ்நாடு அரசின் மீன்வள பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழத்தில் துறை சார் நிபுணர், சுருக்கெழுத்து தட்டச்சர், உதவியாளர் உள்ளிட்டப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பட உள்ளன. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 08.06.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: அரசு மருத்துவமனை வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!
Subject Matter Specialists (Animal Husbandry)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Master’s degree in Veterinary Science / Animal Science (specialization in Livestock Production & Management / Poultry / Dairy Science / Veterinary Extension) படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 56,100 – 1,77,500
Stenographer Grade III
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 19,500 – 62,000
Skilled support staff (KVK)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 18,200 – 57,900
தேர்வு செய்யப்படும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.tnjfu.ac.in/downloads/career-pdf/Application%20form-1.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : THE REGISTRAR, TAMIL NADU Dr. J. JAYALALITHAA FISHERIES UNIVERSITY, Vettar River View Campus, Nagapattinam-611 002 Tamil Nadu.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.06.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.tnjfu.ac.in/downloads/career-pdf/NOTIFICATION-tnjfu.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.