தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழத்தின் கீழ் செயல்படும் திருவள்ளூரில் உள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 04.07.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Senior Research Fellow
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: Ph.D/ M.F.Sc. Fisheries Science/ M.Sc. Marine Biology / Zoology படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 25,000
Field Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: டிப்ளமோ அல்லது டிகிரி படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 12,000
Lab Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: M.Sc. / B.Sc. (Chemistry) படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 10,000
Driver
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 12,000
Boat Driver
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: டிப்ளமோ அல்லது டிகிரி படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18,000
தேர்வு செய்யப்படும் முறை: மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: deanfcriponneri@tnjfu.ac.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.07.2025
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.tnjfu.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.