தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழத்தில் உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 14.08.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Assistant Professor
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Master’s Degree in Fisheries Science படித்திருக்க வேண்டும். நெட் தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 57700 – 182400
Junior Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 15.07.2025 அன்று 18 வயது 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 19500 – 62000
தேர்வு செய்யப்படும் முறை: மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.tnjfu.ac.in/st_special.php என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: The Registrar, Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University, Nagapattinam-611 002
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 250
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.08.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.tnjfu.ac.in/st_special.php என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.