தமிழ்நாடு அரசில் டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் நவம்பர் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத்துறையில் (Tamilnadu Motor Vehicle Maintenance Department) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 79 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதையும் படியுங்கள்: கோவையில் ரயில்வே வேலை வாய்ப்பு; 1284 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!
Graduate Apprentices
காலியிடங்களின் எண்ணிக்கை: 18
கல்வித் தகுதி: BE/B. Tech in Mechanical Engineering/ Automobile Engineering படித்திருக்க வேண்டும்
ஊக்கத்தொகை: ரூ. 9,000
Technician (Diploma) Apprentices
காலியிடங்களின் எண்ணிக்கை: 61
கல்வித் தகுதி : Diploma in Mechanical Engineering/ Automobile Engineering படித்திருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை: ரூ. 8,000
வயது தகுதி: 18 முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு அந்தந்த கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க – http://portal.mhrdnats.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் முதலில் பதிவுச் செய்துக் கொள்ள வேண்டும்.
பதிவு செய்த பின்னர், http://boat-srp.com/ என்ற இணையதளத்தில் TAMIL NADU MOTOR VEHICLE MAINTENANCE DEPT என்பதை தேடி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.11.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://boat-srp.com/wp-content/uploads/2022/10/TNMVMD_Notification_2022_23.pdf என்ற இணைய தள பக்கத்தைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil