Advertisment

தமிழ்நாடு அரசு வேலை; டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு அரசு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு; 79 பணியிடங்கள்; விருப்பம் உள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!

தமிழ்நாடு அரசில் டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் நவம்பர் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத்துறையில் (Tamilnadu Motor Vehicle Maintenance Department) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 79 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதையும் படியுங்கள்: கோவையில் ரயில்வே வேலை வாய்ப்பு; 1284 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

Graduate Apprentices

காலியிடங்களின் எண்ணிக்கை: 18

கல்வித் தகுதி: BE/B. Tech in Mechanical Engineering/ Automobile Engineering படித்திருக்க வேண்டும்

ஊக்கத்தொகை: ரூ. 9,000

Technician (Diploma) Apprentices

காலியிடங்களின் எண்ணிக்கை: 61

கல்வித் தகுதி : Diploma in Mechanical Engineering/ Automobile Engineering படித்திருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை: ரூ. 8,000

வயது தகுதி: 18 முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு அந்தந்த கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க – http://portal.mhrdnats.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் முதலில் பதிவுச் செய்துக் கொள்ள வேண்டும்.

பதிவு செய்த பின்னர், http://boat-srp.com/ என்ற இணையதளத்தில் TAMIL NADU MOTOR VEHICLE MAINTENANCE DEPT என்பதை தேடி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.11.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://boat-srp.com/wp-content/uploads/2022/10/TNMVMD_Notification_2022_23.pdf என்ற இணைய தள பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment