/indian-express-tamil/media/media_files/xSryHfE9vdNhJUDkIW2H.jpg)
தமிழ்நாடு அரசு மோட்டார் வாகன பராமரிப்பு துறை வேலை வாய்ப்பு
தமிழ்நாடு அரசு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் பட்டதாரி மற்றும் டிப்ளமோ பயிற்சி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 79 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 15.07.2024
பொறியியல் பட்டதாரி பயிற்சி (Graduate (Engineering) Apprentices)
காலியிடங்களின் எண்ணிக்கை: 18
கல்வித் தகுதி : Mechanical Engineering / Automobile Engineering படித்திருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை : ரூ. 9,000
பட்டயப் பயிற்சி (Technician (Diploma) Apprentices)
காலியிடங்களின் எண்ணிக்கை : 61
கல்வித் தகுதி : Mechanical Engineering / Automobile Engineering பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை : ரூ. 8,000
தேர்வு செய்யப்படும் முறை : டிகிரி, டிப்ளமோ அல்லது பொறியியல் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டிற்கு பயிற்சி அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதலில் www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் TAMIL NADU MOTOR VEHICLES MAINTENANCE DEPARTMENT என்பதை டைப் செய்து, கிடைக்கும் இணைப்பில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 15.07.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://boat-srp.com/ என்ற இணையதளப் பக்கத்தினை பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.