scorecardresearch

தமிழ்நாடு விளையாட்டு பல்கலை. வேலை வாய்ப்பு; தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிங்க!

தமிழ்நாடு உடற்கல்வியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வேலை வாய்ப்பு; தகுதி உள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

TNPESU Jobs
தமிழ்நாடு உடற்கல்வியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வேலை வாய்ப்பு

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் கெளரவ விரிவுரையாளர் (Guest Lecturer) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 17 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.06.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: சமூக நலத் துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச தகுதி போதும்; உடனே விண்ணப்பிங்க!

கௌரவ விரிவுரையாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 17

காலியிடங்களின் விவரம்

Physical Education – 2

Yoga – 2

Exercise Physiology and Nutrition – 1

Advanced Training and Coaching – 3

Sports Biomechanics and Kinesiology – 3

Sports Psychology and Sociology – 1

Sports Management – 2

English (SDE) – 1

Tamil (SDE) 1

Yoga (SDE) 1

கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 25,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tnpesu.org/ அல்லது https://tnpesu.org/upload/NOTIFICATION-GUEST_LECTURER_APPOINTMENT_2023-2024-PDF_FORMAT.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி : The Registrar, Tamil Nadu Physical Education and Sports University, Melakottaiyur (PO), Chennai – 600127.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.06.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://tnpesu.org/upload/NOTIFICATION-GUEST_LECTURER_APPOINTMENT_2023-2024-PDF_FORMAT.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tnpesu tamil nadu sports university jobs 2023 apply soon