Advertisment

TNPL Jobs; தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிங்க!

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன வேலைவாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
tnpl jobs

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன வேலைவாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (TNPL) காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் 11.10.2023 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Advertisment

Junior Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் M.Com படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 01.09.2023 அன்று 25 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் SC/SCA/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், BC/BCM/MBC/DNC பிரிவுகளுக்கு 2 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

சம்பள விவரம்

முதல் வருடம்: ரூ. 12,200

இரண்டாம் வருடம்: ரூ. 14,100

2 வருட பயிற்சி கால அளவிற்கு பிறகு: ரூ. 9668- 127- 10303- 139- 10998- 151- 11753

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.tnpl.com/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: GENERAL MANAGER (HR) TAMILNADU NEWSPRINT AND PAPERS LIMITED KAGITHAPURAM-639 136, KARUR DISTRICT, TAMILNADU

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.10.2023

விண்ணப்ப படிவங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 18.10.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://tnpl-13685.b-cdn.net/wp-content/uploads/2023/09/TNPL_Corporate-Office-AdvtNorms-27092023-JA-G3-Trainee-2.pdf என்ற இணையதளப் பக்கத்தை பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment