TNPL Jobs; தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வேலை வாய்ப்பு; டிகிரி, எம்.பி.ஏ படித்தவர்கள் விண்ணப்பிங்க!

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன வேலைவாய்ப்பு; டிகிரி, இன்ஜினியரிங், எம்.பி.ஏ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன வேலைவாய்ப்பு; டிகிரி, இன்ஜினியரிங், எம்.பி.ஏ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
tnpl jobs

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (TNPL) காலியாக உள்ள தலைமை பொது மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் 30.04.2025 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். 

Chief General Manager

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

Advertisment

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இளநிலை பட்டப்படிப்பு அல்லது இன்ஜினியரிங் படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் MBA (Marketing) / PG Diploma in Marketing Management படித்திருக்க வேண்டும். மேலும் 30 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 01.04.2025 அன்று 55 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி, பி.சி, பி.சி.எம், எம்.பி.சி, டி.என்.சி பிரிவுகளுக்கு 2 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு உண்டு.

சம்பள விவரம் ரூ. 118100-3%-247440

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Advertisment
Advertisements

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.tnpl.com/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: GENERAL MANAGER-HR TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED NO.67, ANNA SALAI, GUINDY, CHENNAI – 600 032, TAMIL NADU

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.04.2025

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.

Jobs Tnpl

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: