TNPSC Engineering Services Exam: 2019 தமிழ்நாடு பொறியியல் சேவை ஆட்சேர்ப்புக்கான வாய்வழி சோதனைக்கு (OT) தகுதி பெற்றவர்களின் பட்டியலை 2019 டிசம்பர் 19 ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. ஆவண சரிபார்ப்பு செயல்முறைக்கு கலந்து கொண்டோர், வாய்மொழித்தேர்வு தகுதிப் பெற்றுள்ளதை அறிய tnpsc.gov.in தளத்தில் முடிவுகளை காணலாம்.
டிஎன்பிஎஸ்சி, டி.என்.பி.எஸ்.சி சாலை, சென்னை -600 003 என்ற முகவரி கொண்ட டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில், ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகளுக்கான வாய்மொழித்தேர்வு, 2020 ஜனவரி 3 முதல் ஜனவரி 28 வரை நடத்தப்படும். வாய்மொழித்தேர்வின் போது அனைத்து அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.
டி.என்.பி.எஸ்.சி பொறியியல் சேவைகள் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு 2019 ஆகஸ்ட் 10, ஆகஸ்ட் 25 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்பு செயல்முறைக்கு பட்டியலிடப்பட்ட தேர்வர்கள் அழைக்கப்பட்டனர்.
வாய்மொழித் தேர்வுக்கு தேர்வானவர்களின் முழு லிஸ்ட் காண இங்கே க்ளிக் செய்யவும்
உதவி மின் ஆய்வாளர், உதவி பொறியாளர் வேளாண்மை, உதவி பொறியாளர் சிவில், உதவி பொறியாளர் மீன்வளம், தொழில்துறை பாதுகாப்பு உதவி இயக்குநர் உள்ளிட்ட பல மாநில அரசுத் துறைகளுக்கான 461 காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்படுகிறது.
TNPSC 2019 பொறியியல் சேவைகள் முடிவை எவ்வாறு பார்ப்பது:
TNPSC அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
‘Result’ செக்ஷன் கீழ் இருக்கும் ‘result’ என்பதற்கான லிங்கை கிளிக் செய்க.
தொடர்புடைய விளம்பரத்தைத் தேடி, OT பட்டியலில் க்ளிக் செய்க.
PDF மூலம் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் ரோல் எண்களின் பட்டியல் தெரியும்.