குரூப்-1, குரூப்-2, குரூப்-4 தேர்வுகளுக்கான கால அட்டவணையை ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் டிஎன்பிஎஸ்சி வெளியிடும். அதன்படி 2020ம் ஆண்டிற்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சில சுவாரசியமான வேட்பாளர்கள்!
டிஎன்பிஎஸ்சி தேர்வில் (குரூப்-1, குரூப்-2, குரூப்-4) அன்றாட பொது நிகழ்வுகளில் இருந்து அதிகாமாக கேள்விகள் வருவது வழக்கம். எனவே தேர்வுகளுக்கு முக்கிய நடப்பு நிகழ்வு தலைப்புகளை சிலவற்றை உங்களுக்கு தருகிறோம்.
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு நீங்களாகவே தயாராவது எப்படி ?
வரும் நாட்களில் இன்னும் கூடுதலாக எளிமையான பொது நிகழ்வு தொகுப்புகளை உங்களுக்கு வழங்க தயாராக இருக்கிறோம்.
அடல் பூஜல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அடல் பூஜல் (ATAL JAL) திட்டத்தை ரூ.6,000 கோடி மதிப்பீட்டில், ஐந்தாண்டுக் காலத்தில் (2020-21 முதல் 2024-25 வரை) செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம் ( தேர்வர்களே, இதில் தமிழ்நாடு இல்லை என்பதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ளவேண்டும் . சமீபத்தில் இந்த திட்டத்தில் சேர தமிழ்நாடு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது)ஆகிய 7 மாநிலங்களில், முன்னுரிமை அடிப்படையில் சமுதாயப் பங்களிப்புடன் கூடிய நிலத்தடி நீர்மேலாண்மை மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த இத்திட்டம் வகை செய்கிறது.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் இம்மாநிலங்களில் உள்ள 78 மாவட்டங்களுக்கு உட்பட்ட சுமார் 8,350 கிராமப் பஞ்சாயத்துகள் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாயத்துகள் வாயிலாக நிலத்தடி நீர் மேலாண்மையை மேம்படுத்தி, தேவைக்கேற்ற மேலாண்மையை அடிப்படை நோக்கமாக கொண்டு பழக்க வழக்க மாற்றத்தை ஏற்படுத்த அடல் ஜல் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மொத்த ஒதுக்கீடான ரூ.6,000 கோடியில், 50% உலக வங்கி கடனாக பெறப்பட்டு, அதனை மத்திய அரசு திருப்பிச் செலுத்தும். எஞ்சிய 50% தொகை மத்திய அரசின் வழக்கமான பட்ஜெட் ஒதுக்கீடாக வழங்கப்படும் (இதை நீங்கள் புரிந்து கொள்வது மிகவும் முக்கியம் ). உலக வங்கிக் கடன் மற்றும் மத்திய நிதியுதவி முழுவதும் மாநிலங்களுக்கு நிதியுதவியாக வழங்கப்படும்.
2. தேசிய கங்கைக்குழுவின் முதலாவது கூட்டம்
தேசிய கங்கைக்குழுவின் முதலாவது கூட்டம் ( இதை நீங்கள் புரிந்து கொள்வது மிகவும் முக்கியம் ), பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் டிசம்பர் 14-ஆம் தேதியன்று நடைபெற்றது.
கங்கை மற்றும் அதன் கிளை நதிகளைப் புனரமைத்தல் மாசு தடுப்பு ஆகியவற்றைக் கண்காணிக்கும் ஒட்டுமொத்த பொறுப்பு இந்தக்குழுவுக்கு வழங்கப்பட்டது.
3. கர்த்தார்பூர் சாஹிப் வழித்தடம்
கர்த்தார்பூர் சாஹிப் வழித்தட ஒப்பந்தத்தில் இந்தியா – பாகிஸ்தானுடன் 2019 அக்டோபர் 24 ஆம் தேதி கையெழுத்திட்டது.
இதற்கென அதிநவீன பயணியர் முனையம் ரூ.400 கோடி செலவில் பஞ்சாப் பாரம்பரிய கட்டடக் கலை பாணியில் அமைக்கப்பட்டது.
இந்தக் கட்டடத்தில் தினமும் 5,000 யாத்ரீகர்கள் பயணம் செய்ய வசதியாக 54 குடிபெயர்ச்சி கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தியப் பகுதியில் இந்த முனையக் கட்டிடத்திற்கு யாத்ரீகர்கள் செல்லும் வகையில் 4.19 கிலோமீட்டர் நீள 4 வழிச்சாலை ரூ. 120.05 கோடி செலவில் 6 மாத காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது.
4. தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு :
2021 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பை ரூ. 8754.23 கோடி செலவில் (தெரிந்து கொள்வது முக்கியம் ) மேற்கொள்ளவும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டை ரூ.3941.35 கோடி (தெரிந்து கொள்வது முக்கியம் ) செலவில் மேம்படுத்தவும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பயனாளிகள்:
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையையும், கணக்கெடுப்பதுடன், அஸ்ஸாம் தவிர பிற மாநிலங்களில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையை பதிவு செய்ய தேசிய மக்கள் தொகை பதிவேடு உதவும்.
விவரம்:
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது உலகிலேயே மிகப்பெரிய நிர்வாக மற்றும் புள்ளியியல் ரீதியான நடவடிக்கையாகும். அடுத்த 10 ஆண்டுகளுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021-ல் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும்:
வீடுகளின் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு - 2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை, மற்றும்
மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2021 பிப்ரவரி 9 முதல் 28 வரை ( தெரிந்து கொள்வது மிக முக்கியம் )
அஸ்ஸாம் தவிர பிற மாநிலங்களில், தேசிய மக்கள் தொகை பதிவேடு மேம்படுத்தப்படுவதுடன், வீடுகளை பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாபெரும் பணியில், 30 லட்சம் களப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள், இந்த எண்ணிக்கை 2011-ல் 28 லட்சமாக இருந்தது.
புள்ளி விவர சேகரிப்புக்கு செல்போன் செயலிகளை பயன்படுத்துவதுடன் கண்காணிப்புப் பணிக்காக மைய தகவு ஒன்றை ஏற்படுத்துவதன் மூலம், மேம்பட்ட தரத்திலான மக்கள் தொகை விவரங்களை விரைவில் வெளியிட வழிவகுக்கும்.
புள்ளி விவரப் பரவல் மேம்பட்டதாக இருப்பதோடு, ஒரு பொத்தானை இயக்கினால், ஒரு கொள்கையை உருவாக்கத் தேவையான அனைத்து விவரங்களும் கிடைக்கச் செய்தல்.
மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒரு சேவையாக (CaaS) மேற்கொள்வதால், அமைச்சகங்களுக்கு தேவைப்படும் புள்ளி விவரங்களை சுத்தமாகவும் எந்திரங்களால் படிக்கக்கூடியவையாகவும், நடவடிக்கைக்கு ஏற்றவாறும் வழங்க முடியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.