தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் அடுத்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணை வெளியிடும். அந்தவகையில் 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்வுக்கான அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
Advertisment
2022ம் ஆண்டுக்கான குரூப் 2, 2ஏ தேர்வு, மே 21-ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற்றது. இதையடுத்து, குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுக்கான முதல்நிலை தேர்வுகள் முடிவுகள் கடந்த நவம்பர் மாதம் வெளியானது.
இந்நிலையில் முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு 2023 நவம்பரில் வெளியாகும் எனவும், அதற்கான தேர்வு 2024 பிப்ரவரியில் நடைபெறும் என்றும் கூறியுள்ளது. ஆனால் அதற்கான காலிப் பணியிடங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
Advertisment
Advertisements
சமீபத்தில் வெளியிடப்பட்ட கால்நடை உதவி சிகிச்சை நிபுணர் காலி பணியிடங்களுக்கான தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி நடைபெறும்.
ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் பிரிவில் காலியாக இருக்கும் 828 இடங்களுக்கும், ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில், சாலை ஆய்வாளர் பணியில் காலியாக இருக்கும் 762 பணியிடங்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, தேர்வு மே மாதம் நடைபெறும். இதற்கான தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும்.
ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் பிரிவில், 101 பணியிடங்களுக்கு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியாகும். தேர்வு டிசம்பர் மாதம் நடத்தப்படும்.
மேலும் சுற்றுலா துறையில் உதவி அலுவலர் பணி நிலை 2-ல் 17 பணியிடங்களும், உதவி புவியியலாளர் பணியிடங்களில் 19 இடங்களும், விளையாட்டு இயக்குனர் பணியில் 12 இடங்களும், தமிழ்நாடு கால்நடை சேவை துறையில் உதவி ஆராய்ச்சி அலுவலர் பணியிடத்தில் ஐந்து இடங்களும் என 11 பிரிவுகளில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
குரூப் 4 பணிகளுக்கான அறிவிப்புகள் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டு, தேர்வு 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும், இதற்கான முடிவுகள் அதே ஆண்டில் மே மாதம் வெளியாகும்.
இதேபோல் 2023ஆம் ஆண்டில், பல்வேறு பணிகளுக்காக தேர்வு குறித்த தகவல்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. ஆனால் குரூப் 2, 2 ஏ, குரூப் 1 பதவிகளுக்கான அறிவிப்புகள் குறித்த தகவல் இந்த அட்டவணையில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை முழு விவரம்:
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“