/tamil-ie/media/media_files/uploads/2019/07/template-2019-07-11T155455.687.jpg)
tnpsc, tnpsc group 4, tnpsc group 4 answer key, tnpsc group 4 answer key download 2019
Tamil Nadu Public Service Commission released tnpsc cese answer key 2019: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய பொறியியல் பணித் தேர்வு (Tamil Nadu Combined Engineering Services Exam) விடைத்தாள் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆட்சேபனை இருந்தால், ஆகஸ்ட் 21-க்குள் தெரிவிக்கலாம். அதன்பிறகு வரும் ஆட்சேபனைகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஏற்காது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் பொறியியல் பணித் (Tamil Nadu Combined Engineering Services Exam) தேர்வு ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெற்றது. தமிழக அரசுப் பணிகளில் பணியாற்ற விரும்பும் பொறியாளர்கள் இதில் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். ஜூனியர் என்ஜினீயர், ஆர்கிடெக்ட் பணிகளுக்கான தேர்வு இது.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/answer-key-tnpsc-2-300x184.jpg)
TNPSC AE Exam Answer Key 2019: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
இந்தத் தேர்வுக்கான விடைத்தாள் (Answer Key) அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளமான tnpsc.gov.in -ல் வெளியிடப்பட்டிருக்கிறது. விடைத்தாள் வெளியாகி 7 நாட்களுக்குள் தேர்வர்கள் அதில் தங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம். அதன்படி வருகிற ஆகஸ்ட் 21 மாலை 5.45 மணிக்குள் தங்கள் ஆட்சேபனையை தெரிவிக்க வேண்டும்.
அதன்பிறகு வரும் ஆட்சேபனைகள் ஏற்கப்படாது என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்திருக்கிறது. எழுத்துத் தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதித் தேர்வு நடைமுறைகள் டிசம்பரில் இருக்கும்.
தேர்வு எழுதியவர்கள் தாமதமின்றி விடைத்தாளை பார்த்து ஏதாவது ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.