டி.என்.பி.எஸ்.சி குரூப் - 4 தேர்வு பயிற்சி வகுப்புகள் இணையவழியில் ஒளிபரப்பு
டி.என்.பி.எஸ்.சி குரூப் - 4 தேர்வு பயிற்சி வகுப்புகளை இணைய வழியில் ஒளிபரப்பு செய்ய உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
Advertisment
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம், இந்த ஆண்டு திட்டப்படி, குரூப் - 4 தேர்வுகளை விரைவில் அறிவிக்க உள்ளது. இந்தத் தேர்வை, ஊரகப்பகுதி மாணவர்கள் அதிகம் பேர் எழுத வசதியாக, அண்ணா நிர்வாக பணியாளர் கல்லுாரியில், இணையதள பயிற்சி வகுப்புகள், இம்மாதம், 13ம் தேதி துவங்கின. பயிற்சி வகுப்புகள், 'AIM TN' வலைதள பக்கம், 'யு டியூப்' சேனலில் ஒளிபரப்பாகின்றன.
டி.என்.பி.எஸ்.சி குரூப் - 4 தேர்வு எழுத உள்ளவர்கள், தங்களிடம் உள்ள ஸ்மார்ட் போன் வழியாக, இந்த இணைய வழி குரூப் - 4 தேர்வு பயிற்சி வகுப்பில், இலவசமாக பாடங்களை கற்று, தகுதி தேர்வில் பங்கேற்கலாம். பாடத்திட்டங்களை தொகுதி வாரியாக வடிவமைத்து, தினமும் நடத்தப்படும்.
Advertisment
Advertisements
ஒவ்வொரு சனிக்கிழமையும் மாதிரி தேர்வு நடத்தி, அதை மதிப்பீடு செய்து முடிவுகள் வெளியிடப்படும். ஞாயிற்றுக்கிழமை நேரலையில் வினாத்தாள் குறித்த விவாதம் நடக்கும் என்று டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“