scorecardresearch

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 – வி.ஏ.ஓ தேர்வு எப்போது? செவ்வாய்க் கிழமை தேதி அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 – வி.ஏ.ஓ தேர்வு அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று போட்டித் தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி செவ்வாய்க்கிழமை (மார்ச் 29) அறிவிப்பு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

TNPSC announcement today for Group IV Exam, TNPSC announcement today for VAO Exam, TNPSC, Today TNPSC Group IV Exam date announcement, Today TNPSC VAO exam date announcemet, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 - விஏஓ தேர்வு எப்போது, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 - விஏஓ தேர்வு தேதி செவ்வாய்க்கிழமை அறிவிப்பு, டிஎன்பிஎஸ்சி குரூப் 4, விஏஓ தேர்வு, TNPSC announcement today for Group IV Exam and VAO Exam

TNPSC Group 4 Exam latest Update: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 – வி.ஏ.ஓ தேர்வு அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று போட்டித் தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி செவ்வாய்க்கிழமை (மார்ச் 29) அறிவிப்பு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குருப் 2ஏ பதவிகளுக்கான போட்டித்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி மார்ச் 23ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 – வி.ஏ.ஓ தேர்வு மார்ச் மாதம் மத்தியில் அறிவிக்கப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி உயர் அதிகாரி தெரிவித்திருந்ததால், குரூப் 4 – வி.ஏ.ஓ தேர்வு அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று போட்டித் தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

TNPSC குரூப் 4 தேர்வானது, தற்போது 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. அவை,

  1. இளநிலை உதவியாளர் (Junior Assistant)
  2. தட்டச்சர் (Typist)
  3. சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist)
  4. கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer)
  5. வரித் தண்டலர் (Bill Collector)
  6. நில அளவர் (Field Surveyor)
  7. வரைவாளர் (Draftsman) ஆகிய பணிகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது.

அதனால், 2022 மார்ச் மத்தியில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்படும் என கடந்த வாரம் டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரி பேட்டி அளித்ததால், மார்ச் இறுதியே வந்துவிட்டது ஆனால் இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லையே என்று எதிர்பார்த்து காத்திருந்த போட்டித் தேர்வர்களுக்கு நற்செய்தியாக டி.என்.பி.எஸ்சி குரூப் 4 0 வி.ஏ.ஓ தேர்வு அறிவிப்பை செவ்வாய்க்கிழமை (மார்ச் 29) வெளியிடுகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால், போட்டித் தேர்வர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tnpsc announcement today for group iv exam and vao exam