குரூப் I, யுபிஎஸ்சி தேர்வர்களின் வருகையை சமாளிப்பார்களா குரூப் II தேர்வர்கள்?

TNPSC Tentative Annual Recruitment Planner 2020: தமிழக அரசு, குரூப் II தரத்தை யுபிஎஸ்சி தேர்வுக்கு நிகராக உயர்த்த முயற்சி செய்திருப்பதால், இயல்பாகவே குரூப் II தேர்வு  போட்டியின் அடிப்படை சாராம்சமும் மாறியுள்ளது. குரூப்I/யுபிஎஸ்சி தேர்வர்களுக்கு சாதகமாக குரூப் II தேர்வை மாற்றியிருகின்றது. 

tnpsc notification, tnpsc annual planner
tnpsc notification, tnpsc annual planner

TNPSC 2020 Recruitment Planner : தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் , 2020ம் ஆண்டின் தேர்வு கால அட்டவனையை வெளியிட்டுள்ளது.

இன்று காணப்பட்டது அரிய வகை சூரிய கிரகணமா ?

அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC)  தேர்வுகள் நடத்தி வருகின்றன. 2020ம் ஆண்டில் எந்தெந்த துறைகளில், எப்போதெல்லாம் தேர்வுகள் நடத்தப்படும் என்று தகவல் இந்த அட்டவணையில் இடம் பெற்றிருக்கும்.

 10/12 படிப்பையும் மற்றும் ஏதேனும் ஒரு டிகிரி படிப்பை முடித்தவர்கள் ஜனவரி மாதத்தில் நடக்கும் குரூப் 1 தேர்வையும், மே மாதத்தில் நடக்க இருக்கும் குரூப் 2 தேர்வையும் எழுதலாம். குறைந்தது 10ம் வகுப்பை முடித்தவர்கள் அடுத்தாண்டு செப்டம்பர் மாதம் நடக்கும் குரூப்-4 மற்றும் விஏஓ தேர்வுகளில் கலந்து கொள்ளலாம்.

இந்த வருட கால அட்டவணை தேர்வர்களுக்கு நிறைய சாதகமும்/ பாதகமும்  அமைந்திருக்கிறது என்றே சொல்லலாம்.

உதாரணமாக, குரூப் II தேர்வுக்கு பின்னால் குரூப் I தேர்வு வந்தால் இரண்டிற்கும் தனித்தனியாக தேர்வர்கள் தயார் செய்ய வேண்டியிருக்கும். கடந்த ஆண்டுகளில் இந்த  இரண்டு தேர்வுக்கும் இடையில் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருப்பது வழக்கம்.

குரூப் II முதல்நிலைத் தேர்வுகளில் தனியாக 100 கேள்விகள் மொழி பாடத்தில் இருந்து கேட்பது வழக்கம். இந்த மொழி தொடர்பான கேள்விகள் குரூப் 1 தேர்வில் முற்றிலும் கிடையாது. இதனால், ஏகப்பட்ட தேர்வர்கள் வெறும் குரூப் I தேர்வு மற்றும் யு பிஎஸ்சி தேர்வுகளோடு மட்டும் நிறுத்துக் கொள்வர். குரூப் II மற்றும் குரூப் IV தேர்வுகளில் சும்மா கடமைக்காக மட்டும் எழுதுவது வழக்கம்.

டிஎன்பிஎஸ்சி குரூப் I முதல்நிலைத் தேர்வு

ஆனால், இந்த நிலை தற்போது மாறியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் II தேர்வில் சில அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தது. முதல்நிலைத் தேர்வில் 100 மொழி  கேள்விகள் நீக்கப்பட்டதாகவும், முதன்மைத் தேர்வு ஆங்கில மொழிபெயர்ப்பு, தமிழ் மொழிபெயர்ப்பு, திருக்குறள் கட்டுரை, தபால் எழுதுதல் போன்றவைகளை அடங்கும் என்று தெரிவித்து இருந்தது.

மேலும் விவரங்களுக்கு- இங்கே கிளிக் செய்யவும்

குரூப் II முதல்நிலைத் தேர்வு 

 

100 மொழி கேள்விகள் இல்லை.

 

முதன்மைத் தேர்வு : 

 

மேலும், சில நாட்களுக்கும் முன்பு குரூப் II மாதிரி வினாத் தாள் ஒன்றையும்  வெளியிட்டு இருந்தது டிஎன்பிஎஸ்சி. இந்த மாதிரி வினாத் தாள் உண்மையில் யுபிஎஸ்சி, குரூப் I தேர்வுகளுக்கு நிகரானதாக இருந்ததாக பல தேர்வர்கள் கருத்து தெரவித்தனர்.

இதனால், வரும் மே மாதம் குரூப் II தேர்வில், ஜனவரி மாதம் குரூப் I தேர்வுக்கு தயார் செய்த தேர்வர்களும், ஜூலை  மாதத்தில் நடக்கும் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருக்கும் தேர்வர்களும் அதிக அளவில் கலந்து கொள்வர். முன்பை போல், சும்மா கடமைக்காக வந்து போகாமல் தேர்வில் வெற்றியடைய முடியும் என்ற முனைப்பும் அவர்களிடம் அதிகம் இருக்கும்.

யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு

குரூப் II/IV தேர்வு மட்டும் எழுதும் தேர்வர்கள், குடும்ப சூழல், வயது வரம்பு போன்ற காரணங்களால் குரூப்I/யுபிஎஸ்சி தேர்வுக்கு தாவுவது மிகவும் கடினம், அது போன்று  குரூப்I/யுபிஎஸ்சி தேர்வர்கள் 100 மொழி பாடக் கேள்விகளால் குரூப் II/IV தேர்வுக்கு தாவுவது மிகவும் கடினம்.

தமிழக அரசு, குரூப் II தரத்தை யுபிஎஸ்சி தேர்வுக்கு நிகராக உயர்த்த முயற்சி செய்திருப்பதால், இயல்பாகவே குரூப் II தேர்வு  போட்டியின் அடிப்படை சாராம்சமும் மாறியுள்ளது. குரூப்I/யுபிஎஸ்சி தேர்வர்களுக்கு சாதகமாக குரூப் II தேர்வை மாற்றியிருகின்றது.

குரூப் II தேர்வர்கள், போட்டி தாங்காமல் குரூப் IV தேர்வை நோக்கி நகர்வார்களா , இல்லை மனதில் புரட்சி அடித்தி குரூப்- I/யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராவார்களா, இல்லை எவன் வந்தா எனகென்ன என்ற முனைப்போடு குரூப் II தேர்வில் சாதிப்பார்களா ? என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

 

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tnpsc annual planner 2020 how by changing group 2 syllabus tnpsc changed the dynamics of competition

Next Story
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு ஆங்கிலம் தேர்வுக்கான மாக் டெஸ்ட் இங்கேcbse class 10 sample question paper, cbse English 10th question paper, cbse English test syllabus, cbse, cbse.nic.in
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com