Advertisment

குரூப் 1 இல்லை; குரூப் 2 இல்லை; குரூப் 4 இல்லை... டி.என்.பி.எஸ்.சி 2023 தேர்வு அட்டவணை ஷாக்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டு அட்டவணை 2023; குரூப் 2, குரூப் 4, குரூப் 1 தேர்வுகள் இல்லாததால் தேர்வர்கள் அதிருப்தி

author-image
WebDesk
New Update
குரூப் 1 இல்லை; குரூப் 2 இல்லை; குரூப் 4 இல்லை... டி.என்.பி.எஸ்.சி 2023 தேர்வு அட்டவணை ஷாக்!

தமிழகத்தில் அரசு வேலை என்பது சிறப்பானதாக கருதப்பட்டு வருகிறது. இதற்காக லட்சக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். பெரும்பாலான தமிழக இளைஞர்களின் கனவு அரசு வேலை தான். இந்த அரசு வேலை கனவை நனவாக்குவது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.

Advertisment

ஆம்! தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. இதில் குரூப் 1 முதல் குரூப் 8 வரையிலான தேர்வுகளும், இதர துறை சார்ந்த தேர்வுகளும் நடத்தப்படுகிறது. மேலும் தற்போது தமிழக அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களுக்கான ஆட்சேர்ப்பு டி.என்.பி.எஸ்.சி வழியாக செய்யப்படுகிறது. இந்த அரசு வேலையை பெறுவதற்காக ஆயிரக்கணக்கானோர் தனி பயிற்சி மையங்களில் பணம் கட்டி பயிற்சி பெற்று வருகின்றனர். அதேநேரம் பெரும்பாலோனோர் நூலகங்கள், ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் அமர்ந்து பள்ளிப் புத்தங்களை படித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: சென்னை பெட்ரோலியம் கார்ப்ரேஷன் வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதி; மிஸ் பண்ணாதீங்க!

இந்தநிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதனைப் பார்த்த தேர்வர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அட்டவணையில், தற்போது நடந்து முடிந்துள்ள முதல் நிலை தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்தப்படியாக ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் பிரிவில் காலியாக இருக்கும் 828 இடங்களுக்கும், ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில், சாலை ஆய்வாளர் பணியில் காலியாக இருக்கும் 762 பணியிடங்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, தேர்வு மே மாதம் நடைபெறும். இதற்கான தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும். ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் பிரிவில், 101 பணியிடங்களுக்கு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியாகும். தேர்வு டிசம்பர் மாதம் நடத்தப்படும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுலா துறையில் உதவி அலுவலர் பணி நிலை 2-ல் 17 பணியிடங்களும், உதவி புவியியலாளர் பணியிடங்களில் 19 இடங்களும், விளையாட்டு இயக்குனர் பணியில் 12 இடங்களும், தமிழ்நாடு கால்நடை சேவை துறையில் உதவி ஆராய்ச்சி அலுவலர் பணியிடத்தில் ஐந்து இடங்களும் என 11 பிரிவுகளில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு 2023 நவம்பரில் வெளியாகும் எனவும், அதற்கான தேர்வு 2024 பிப்ரவரியில் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான காலிப் பணியிடங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

ஆனால் குரூப் 2, 2ஏ, குரூப் 1 பதவிகளுக்கான அறிவிப்புகள் குறித்த தகவல் இந்த அட்டவணையில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அட்டவணையை பார்த்த தேர்வர்கள், நிபுணர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளதோடு, மிகுந்த வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர். லட்சக்கணக்கானோர் படித்து வரும் தேர்வுகளுக்கு, ஒர் ஆண்டில் கிட்டத்தட்ட 1700க்கும் அதிகமான இடங்களை மட்டும் நிரப்பவதற்கான அட்டவணை ஏமாற்றம் அளிப்பதாக தேர்வர்கள் கூறுகின்றனர்.

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் அதிகமானோர் பங்கேற்பது குரூப் 1, குரூப் 2,2ஏ, குரூப் 4 தேர்வுகள் தான். இதில் குரூப் 1 மற்றும் குரூப் 2,2ஏ தேர்வுப் பற்றி அட்டவணையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. குரூப் 4 தேர்வு பற்றிய அறிவிப்பு இருந்தாலும், காலியிடங்கள் விவரங்கள் இல்லை, மேலும் அது 2024 ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் வேதனையுடன் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tnpsc Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment