TNPSC Group 4 Answer Key Released Officially @ tnpsc.gov.in: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் செப்டம்பர் 1-ம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. ஆறாயிரத்திற்கும் அதிகமான காலிப் பணியிடங்களுக்கு 13 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வு எழுதினர்.
தேர்வு முடிந்து 10 நாட்கள் நெருங்கும் சூழலில் டிஎன்பிஎஸ்சி இன்று மதியம் குரூப் 4 தேர்வு விடைத்தாளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்த குரூப் 4 தேர்வு விடைத்தாலில் பொது அறிவுத்தாளில் உள்ள வினா எண்கள் 171, 173, 174 தற்போது விடை அளிக்கப்படவில்லை. இந்த கேள்விகள் வல்லுநர் குழுவிடம் சமர்பிக்கப் பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இருப்பினும், தேர்வர்கள் மேற்படி மூன்று வினாக்களுக்கும் அவர்களது கருத்துக்களை தகுந்த ஆதாரத்துடன் தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளது. தேர்வர்களிடம் இருந்து பெறப்படும் மறுப்புகள்/கருத்துக்களை வல்லுநர் குழுவிற்குப் பரிந்துரைக்கப் படும் என்றும் கூறியுள்ளது.
தங்களது பரிந்துரைகள்/கருத்துகளை வரும் 17-ம் தேதி வரையில் தேர்வர்கள் சமர்பிக்கவேண்டும்.
நீங்கள், பதிவு இறக்கம் செய்ய வேண்டிய லிங்க்- http://www.tnpsc.gov.in/answerkeys_10_09_2019_G4.html