குரூப் 4 தேர்வு மாதிரி குருப் 2-விலும் பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு - டி.என்.பி.எஸ்.சி தலைவர் பிரபாகர்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் பணியிடங்களை அதிகரித்த மாதிரி, குரூப் 2 தேர்விலும் பணியிடங்களை அதிகரிக்க நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று டி.என்.பி.எஸ்.சி-யின் தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் பணியிடங்களை அதிகரித்த மாதிரி, குரூப் 2 தேர்விலும் பணியிடங்களை அதிகரிக்க நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று டி.என்.பி.எஸ்.சி-யின் தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
TNPSC Officer 2

சென்னையில் டி.என்.பி.எஸ்.சி-யின் தலைவர் பிரபாகர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் அறிவித்த குரூப் 2 பணியிடங்களுக்கான தேர்வு இன்று (28.09.2025) நடைபெற்றது. தேர்வு குறித்து சென்னையில் டி.என்.பி.எஸ்.சி-யின் தலைவர் பிரபாகர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

Advertisment

“பத்திரிகைகளில் ஒரு சில செய்திகளில் சரியாக புரிந்துகொள்ளப்படாமல் வெளியிடப்பட புகைப்படங்கள். அதற்கான விளக்கங்களை தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் மூலம் நாங்கள் விளக்கம் அளித்திருக்கோம். தேர்வுகள் எல்லாம் சிறப்பாக நடந்து எந்தவிதமான பிரச்னைகளும் இல்லாமல் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுக அடுத்த மாதம் வெளியிடப்படும். 

வினாத்தாள் பல கட்டமாக தயாரிக்கப்படுகிறது. ரகசிய கருதி கருதி அது ஒரே சமயத்தில் தயாரிக்கப்படுவதில்லை. அதுவும் பலகட்ட பரிசீலனை செய்யப்படுகிறது. அதனுடைய மொழிபெயர்ப்பு பற்றியும் அது பாடத்திட்டத்தில் இருக்கிறதா, வெளியா இருக்கிறதா?  என்பது பற்றி எல்லாம் பாடத்தின் வல்லுநர்கள் பார்க்கிறார்கள். நாங்கள் அதை நேரடியாகப் பார்க்கக் கூடாது. பாடங்களின் வல்லுநர்க பரிசீலனை செய்து, சீல்வைத்து, அதன்பிறகுதான் வினாத்தாள் தயார் செய்யப்படுகிறது.     

இருந்தாலும், ஒருசிலை சமயங்களில் அச்சுப்பிழை, மொழிபெயர்ப்பு பிழை 1-2 இடங்களில் வந்துகொண்டுதான் இருக்கிறது. அது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது. முடிந்தவரை அந்த தவறுகள் எல்லாம் இல்லாமல் இந்த கேள்விகளைத் தயாரிக்கிற நிபுணர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம். அதே போல, சில தவறான கேள்விகளைத் தயாரிக்கிற நிபுணர்கள் வினாத்தாள் தயாரிப்ப பணியில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். இது போல செய்யக்கூடாது என்று நாங்க மிகுந்த கவனமாக முயற்சி செய்கிறோம். இருந்தாலும், ஒரு சில பிழைகள் வருவது எங்களால் தவிர்க்க இயலாததாகிவிடுகிறது.

Advertisment
Advertisements

அப்படி ஒரு சில தவறான கேள்விகள் வந்துவிடுகிறது என்றால், மாணவர்கள் பாதிகப்படக் கூடாது என்பதற்காக நாங்கள் நிபுணர்கள் குழுவால் ஆராய்ச்சி பண்ணி, அதில் எந்த அளவுக்கு சந்தேகத்தின் பலனை மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லி, மாணவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் ஓரளவுக்கு நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.

ஓ.எம்.ஆர் சீட்டில் முறைகேடு என்பதெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்னாடி கேள்விப்பட்ட செய்திகள், இப்போது  ஓ.எம்.ஆர் சீட்டில் நாம் பல முன்னேற்றங்களை ஏற்படுத்திவிட்டோம். பல ரகசிய குறியீடுகள் வைத்திருக்கிறோம். அது இல்லாமல் பகுதி 1, பகுதி 2 என இரண்டு பகுதிகளாகப் பிரித்துவிடுவோம். தேர்வு அறையை விட்டுப் போகிறபோதே அது யாருடைய விடைத்தாள் என்று யார் நினைத்தாலு கண்டுபிடிக்கவே முடியாது. அது மாதிரி பகுதி 1-ஐயும் பகுதி 2-ஐயும் பிரித்துவிடுவோம். அதே மாதிரி, ஓ.எம்.ஆர் சீட்டில் போதுமான அளவில் பாதுகாப்பு இருக்கிறது என நினைக்கிறேன்.

குரூப் 2 பணியிடங்களை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதா என்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த டி.என்.பி.எஸ்.சி தலைவர் பிரபாகர், “எல்லா பணியிடங்களையும் நாம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டுதான் போகிறோம்.  அதே மாதிரி ஒரு தேர்வு நடத்துகிறபோது நாம் பல முயற்சிகள் பண்ணி அந்த தேர்வு நடத்துகிறோம். 5 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள் என்றால் அதற்கு நாம் எவ்வளவு முயற்சிகள் மேற்கொண்டிருப்போம் என்று உங்களுக்கு தெரியும். அதனால், ஒரு பணியிடம்கூட வீணாகாமல், தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு அதிகமான வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நாங்கள் எல்லா துறைகளிடமும் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். எப்போதுமே, ஒரு நன்மை என்ன என்றால் இறுதி முடிவு வெளியிடுகிற வரைக்கும், கவுன்சிலிங் நடக்கிற வரைக்கும் பணியிடங்களை அதிகரித்துகொண்டே போகலாம். அதே மாதிரி குரூப் 4 தேர்விலும் அதிகரித்தோம். அதே மாதிரி குரூப் 2-விலும் அதிகரிக்க நல்ல வாய்ப்பு இருக்கிறது” என்று கூறினார்.

Tnpsc

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: