தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் அடங்கிய நேர்முகத் தேர்வு பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 105 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 28.09.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
அலகுத் தலைவர் – துணை பொது மேலாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.E / B.Tech., in Mechanical / Chemical / Electrical Engineering படித்திருக்க வேண்டும். மேலும் 20 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம் : நிலை – 28
உதவி பொது மேலாளர் (நிதி)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Chartered / Cost Accountant படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம் : நிலை – 27
மேலாளர் (இயந்திரவியல்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.E/B.Tech., Mechanical Engineering படித்திருக்க வேண்டும். மேலும் 15 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம் : நிலை – 26
மேலாளர் (இரசாயனம்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.E/B.Tech., in Chemical Engineering / M.Sc., (Chemistry) படித்திருக்க வேண்டும். மேலும் 18 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம் : நிலை – 26
மேலாளர் (மின்னியல்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.E/B.Tech., in Electrical Engineering படித்திருக்க வேண்டும். மேலும் 15 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம் : நிலை – 26
மேலாளர் (சந்தையியல்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: MBA (Marketing) படித்திருக்க வேண்டும். மேலும் 15 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம் : நிலை – 26
துணை மேலாளர் (இயந்திரவியல்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: B.E/B.Tech., Mechanical Engineering படித்திருக்க வேண்டும். மேலும் 10 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம் : நிலை – 25
துணை மேலாளர் (மின்னியல்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: B.E/B.Tech., in Electrical Engineering படித்திருக்க வேண்டும். மேலும் 10 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம் : நிலை – 25
துணை மேலாளர் (கருவி)
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: B.E/B.Tech., Instrumentation படித்திருக்க வேண்டும். மேலும் 10 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம் : நிலை – 25
துணை மேலாளர் (பாதுகாப்பு)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.E./B.Tech., Mechanical/Chemical/Electrical + Diploma in Safety Management படித்திருக்க வேண்டும். மேலும் 10 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம் : நிலை – 25
துணை மேலாளர் (பொருட்கள்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.E./B.Tech., (Mechanical) + Diploma in Materials Management படித்திருக்க வேண்டும். மேலும் 10 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம் : நிலை – 25
உதவி பொது மேலாளர் (திட்டங்கள்) முதலீடு
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Chartered Accountant or MBA (Finance) படித்திருக்க வேண்டும். மேலும் 7 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம் : நிலை – 25
கல்லூரி நூலகர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 17
சட்டம் – 8
உயர் கல்வி - 9
கல்வித் தகுதி: Master’s Degree in Library Science, Information Science or Documentation Science படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : 57,700
கணக்கு அலுவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: CA/ICWA படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : நிலை – 23
கணக்கு அலுவலர் நிலை 3
காலியிடங்களின் எண்ணிக்கை: 8
கல்வித் தகுதி: CA/ICWA படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : நிலை – 23
மேலாளர் (நிதி)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: CA/ICWA படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : நிலை – 23
முதுநிலை அலுவலர் (நிதி)
காலியிடங்களின் எண்ணிக்கை: 6
கல்வித் தகுதி: CA/ICWA படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : நிலை – 22
தானியங்கி பொறியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Automobile or Mechanical Engineering படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : நிலை – 22
கால்நடை உதவி மருத்துவர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 31
கல்வித் தகுதி: B.V.Sc., Degree / B.V.Sc., & A.H படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : நிலை – 22
உதவி இயக்குனர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 13
கல்வித் தகுதி: Master's and Bachelor's degree in Tamil Literature படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : நிலை – 22
உதவி மேலாளர் (திட்டங்கள்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: Degree in Engineering (Mechanical / Electrical and Electronics) படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : நிலை – 22
உதவி மேலாளர் (பொருட்கள்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: B.E./B.Tech., (Mechanical) + Diploma in Materials Management. படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம் : நிலை – 22
உதவி மேலாளர் (தொழில்நுட்பம் இயந்திரவியல்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
கல்வித் தகுதி: B.E./B.Tech., (Mechanical) படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம் : நிலை – 22
உதவி மேலாளர் (அமைப்பியல்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.E. Civil Engineering படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம் : நிலை – 22
உதவி மேலாளர் (சந்தையியல்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: MBA (Marketing) படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம் : நிலை – 22
வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். சில பணியிடங்களுக்கு வயது வரம்பு கூடுதலாக இருக்கும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வுக் கட்டணம் : எழுத்துத் தேர்வு ரூ.100, இருப்பினும் SC, SC(A), ST, MBC(V), MBC - DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.
விண்ணப்பம் செய்வது எப்படி?
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், தங்களது கல்வி மற்றும் பிறச் சான்றிதழ்களை கையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.09.2024
இது குறித்து மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/ என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.