Advertisment

TNPSC வேலை வாய்ப்பு; 118 பணியிடங்கள்; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!

TNPSC தொழில்நுட்ப பணிகள் தேர்வு அறிவிப்பு; 118 பணியிடங்கள்; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
 TN minister thangam thennarasu On  TNPSC Group 2 and 2A Result Tamil News

TNPSC தொழில்நுட்ப பணிகள் தேர்வு அறிவிப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு அடங்கிய பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 118 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 14.06.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

கல்லூரி உடற்கல்வி மற்றும் விளையாட்டு இயக்குனர், சட்டக் கல்லூரிகள்

காலியிடங்களின் எண்ணிக்கை: 12

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Master's Degree in Physical Education and Sports or Physical Education or Sports Science முடித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 57 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம் : நிலை – 24

மேலாளர் (சட்டம்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Law படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினர் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 23

முதுநிலை அலுவலர் (சட்டம்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 9

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.L. Degree படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினர் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 22

உதவி மேலாளர் (சட்டம்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 14

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Law படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

தமிழ் நிருபர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினர் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 22

ஆங்கில நிருபர்

கணக்கு அலுவலர் நிலை - III

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Institute of Chartered Accountants / Cost Accountants படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினர் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 23

கணக்கு அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: Institute of Chartered Accountants / Cost Accountants படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 42 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

சம்பளம் : நிலை – 22

உதவி மேலாளர் (கணக்கு)

காலியிடங்களின் எண்ணிக்கை: 20

கல்வித் தகுதி: Institute of Chartered Accountants / Cost Accountants படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினர் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 22

துணை மேலாளர் (கணக்கு)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Institute of Chartered Accountants / Cost Accountants/ MBA படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினர் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 22

உதவி மேலாளர் (நிதி)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Institute of Chartered Accountants / Cost Accountants/ MBA படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

சம்பளம் : நிலை – 22

உதவி பொது மேலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Degree in Engineering படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 47 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

சம்பளம் : நிலை – 27

வேளாண்மை உதவி இயக்குனர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 6

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் M.Sc., in Agricultural Extension or Agricultural Economics படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 34 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினர் 44 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 22

உதவி இயக்குனர் (புள்ளியியல்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 17

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Statistics or Mathematics or Economics or Applied Economics or Business Economics படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

சம்பளம் : நிலை – 22

உதவி இயக்குனர் (சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை)

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Post Graduate degree in Home Science or Psychology or Sociology or Child Development or Food and Nutrition or Social Work or Rehabilitation Science படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினர் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 22

முதுநிலை உதவி இயக்குனர் (கொதிகலன்கள்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Mechanical Engineering பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 37 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

சம்பளம் : நிலை – 22

நிதியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 6

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Post Graduate Degree in Public Administration (or) Post Graduate Degree in Business Administration (MBA) படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினர் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 22

உதவி இயக்குனர் (நகர் மற்றும் ஊரமைப்பு)

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Post Graduate Degree in Town or City or Urban or Housing or Country or Rural or Infrastructure or Regional or Transport or Environmental Planning படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினர் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 22

உதவி மேலாளர் (திட்டம்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Civil Engineering  மற்றும் MBA படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினர் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை - 22

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வுக் கட்டணம் : எழுத்துத் தேர்வு ரூ.100, இருப்பினும் SC, SC(A), ST, MBC(V), MBC - DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். 

ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், தங்களது கல்வி மற்றும் பிறச் சான்றிதழ்களை கையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.06.2024

இது குறித்து மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/ என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tnpsc Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment