Advertisment

TNPSC வேலை வாய்ப்பு; 861 தொழில்நுட்ப பணியிடங்கள்; டிப்ளமோ, ஐ.டி.ஐ படித்தவர்கள் விண்ணப்பிங்க!

TNPSC தொழில்நுட்ப பணிகள் தேர்வு அறிவிப்பு; 861 பணியிடங்கள்; டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
 TN minister thangam thennarasu On  TNPSC Group 2 and 2A Result Tamil News

TNPSC தொழில்நுட்ப பணிகள் தேர்வு அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் அடங்கிய பட்டயம் மற்றும் தொழிற்பயிற்சி நிலை பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 861 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 11.09.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

உதவி சோதனையாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: A degree or diploma in Electrical Engineering or Electronics Engineering படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : நிலை – 13

உதவி பயிற்சி அலுவலர் (சுருக்கெழுத்து ஆங்கிலம்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். 

சம்பளம் : நிலை – 13

திட்ட உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: Diploma in Civil Engineering or Diploma in Architecture படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : நிலை – 13

இயக்கூர்தி ஆய்வாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 45

கல்வித் தகுதி: Diploma in Automobile Engineering or Diploma in Mechanical Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 13

வரைவாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: Diploma in Civil Engineering or Diploma in Architectural Assistantship படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 11

விடுதிக் கண்காணிப்பாளர் மற்றும் உடற்பயிற்சி அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Diploma in Physical Education படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : நிலை – 11

இளநிலை வரைதொழில் அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 127

பொதுப்பணி – 55

நெடுஞ்சாலை – 33

இந்து சமய அறநிலையத்துறை - 39

கல்வித் தகுதி: Diploma in Civil Engineering or Diploma in Architectural Assistantship படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : நிலை – 11

இளநிலை தொழில்நுட்ப உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Diploma in Handloom Technology or Diploma in Textile Manufacture படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : நிலை – 11

சிறப்பு பணிப்பார்வையாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 22

கல்வித் தகுதி: Diploma in Civil Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 11

அளவர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 15

கல்வித் தகுதி: Diploma in Civil Engineering  அல்லது ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 11

தொழில்நுட்ப உதவியாளர் (தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 10

கல்வித் தகுதி: Diploma in Civil Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 11

உதவி வேளாண்மை அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 25

கல்வித் தகுதி: Diploma in Agriculture படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 10

மேற்பார்வையாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: Diploma in Textile Technology / B.Sc. Textile Technology / B. Tech., Textile Technology படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : நிலை – 10

தொழில்நுட்ப உதவியாளர் (தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகம்) 

காலியிடங்களின் எண்ணிக்கை: 15

கல்வித் தகுதி: Diploma in Civil Engineering படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : நிலை – 10

செயற்பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 9

கல்வித் தகுதி: Diploma in Lab (Technician) படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : நிலை – 9

தொழில்நுட்பவியலாளர் (கம்மியர் தானியங்கி)

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Fitter / Mechanic Motor Vehicle with National Trade Certificate (NTC) (or) Diploma in Automobile / Mechanical Engineering படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : நிலை – 8

தொழில்நுட்பவியலாளர் (கொதிகலன்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 8

கல்வித் தகுதி: Boiler Attendant Certificate Grade II / III படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : நிலை – 8

தொழில்நுட்பவியலாளர் (மின்னியல்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 11

கல்வித் தகுதி: Electrician with National Trade Certificate and ‘B’ Licence (or) Diploma in Electrical and Electronics Engineering and “C” Licence  படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : நிலை – 8

தொழில்நுட்பவியலாளர் (ஆய்வகம்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 17

கல்வித் தகுதி: Diploma in Lab (Technician) படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : நிலை – 8

தொழில்நுட்பவியலாளர் (இயக்கம்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 35

கல்வித் தகுதி: Mechanic Refrigeration and Air conditioner / Fitter / Mechanic Motor Vehicle / Electrician / Instrument Mechanic with National Trade Certificate (NTC) (or) Diploma in Mechanical / Electrical and Electronics / Instrumentation and Control Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 8

தொழில்நுட்பவியலாளர் (குளிரூட்டல்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: Mechanic Refrigeration and Air conditioner with National Trade Certificate (or) Diploma in Mechanical Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 8

தொழில்நுட்பவியலாளர் (உருளிப்பட்டை)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Fitter trade with National Trade Certificate (or) Diploma in Automobile / Mechanical Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 8

தொழில்நுட்பவியலாளர் (பற்றிணைப்பு)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Welder (Gas and Electric) with National Trade Certificate படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 8

வரைவாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 142

கல்வித் தகுதி: Diploma in Civil Engineering or National Trade Certificate (NTC) in the trade of Draftsman (Civil) படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 8

நில அளவர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 289

கல்வித் தகுதி: Diploma in Civil Engineering or National Trade Certificate (NTC) in the trade of Surveyor படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 8

அளவர் மற்றும் உதவி வரைவாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 42

கல்வித் தகுதி: Draughtsmanship (Civil) course/ Diploma in Civil Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 8

தொழில்நுட்ப உதவியாளர் (தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விச் சேவைகள் கழகம்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 10

கல்வித் தகுதி: Diploma in Printing Technology படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 8

வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். சில பணியிடங்களுக்கு வயது வரம்பு கூடுதலாக இருக்கும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. 

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வுக் கட்டணம் : எழுத்துத் தேர்வு ரூ.100, இருப்பினும் SC, SC(A), ST, MBC(V), MBC - DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். 

ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், தங்களது கல்வி மற்றும் பிறச் சான்றிதழ்களை கையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.09.2024

இது குறித்து மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/ என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Jobs Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment