/tamil-ie/media/media_files/uploads/2023/03/TNPSC-Group-4.jpg)
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் அடங்கிய நேர்முகத் தேர்வு பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 330 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 11.06.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
துணை இயக்குநர் (சட்டம்)
(தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Bachelor Degree in Law படித்திருக்க வேண்டும். மேலும் 15 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம்: நிலை – 29
உதவி இயக்குநர் (புள்ளியியல் பகுப்பாய்வாளர்)
(தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Post Graduate in Statistics படித்திருக்க வேண்டும். மேலும் 10 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம்: நிலை – 25
மேலாளர் (சுரங்கம்)
(தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.E. Mining Engineering படித்திருக்க வேண்டும். மேலும் 15 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம்: நிலை – 26
துணை மேலாளர் (சுற்றுச்சூழல்)
(தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.E./B.Tech in Environmental Science படித்திருக்க வேண்டும். மேலும் 10 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம்: நிலை – 25
உதவி மேலாளர் (சுரங்கம்)
(தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: B.E. Mining Engineering படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம்: நிலை – 22
உதவி மேலாளர் (ப மற்றும் நி)
(தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Master of Social Work or MBA (HR) or Master of Personnel Management and Industrial Relations படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம்: நிலை – 22
தொழிற்சாலை மேலாளர் (எஸ்.கே.டி)
(தமிழ்நாடு மேக்னசைட் லிமிடெட்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: BE in Mechanical (or) Chemical Engineering படித்திருக்க வேண்டும். மேலும் 10 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம்: நிலை – 26
தொழிற்சாலை மேலாளர் (ஆர்.கே.டி)
(தமிழ்நாடு மேக்னசைட் லிமிடெட்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: BE in Mechanical (or) Chemical Engineering படித்திருக்க வேண்டும். மேலும் 10 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம்: நிலை – 26
உதவி பொது மேலாளர் (திட்டங்கள்) உள்கட்டமைப்பு
(தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: Degree in Civil Engineering / Architecture/Planning with Full-time MBA or equivalent in Finance / International Business / Business Analytics / Investment / Project Management streams படித்திருக்க வேண்டும். மேலும் 7 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம்: நிலை – 25
உதவி பொது மேலாளர் (திட்டங்கள்) திட்ட மேலாண்மை
(தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: Degree in Engineering with Full-time MBA or equivalent in Finance / International Business / Business Analytics / Investment / Project Management streams படித்திருக்க வேண்டும். மேலும் 7 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம்: நிலை – 25
உதவி செயலாளர்
(தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: Degree with Associate Company Secretary படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம்: நிலை – 22
அறிவியலாளர் தரம் – சி (வனம்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Ph.D in Biotechnology படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம்: நிலை – 25
முதன்மை பெருந்தச்சன் (இந்து சமய அறநிலையத்துறை)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Bachelor of Technology in Traditional Architecture or Bachelor of Fine Arts in Traditional Sculpture படித்திருக்க வேண்டும். மேலும் 15 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம்: நிலை - 25
மண்டல பெருந்தச்சன் (இந்து சமய அறநிலையத்துறை)
காலியிடங்களின் எண்ணிக்கை: 21
கல்வித் தகுதி: Bachelor of Technology in Traditional Architecture or Bachelor of Fine Arts in Traditional Sculpture படித்திருக்க வேண்டும். மேலும் 10 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம்: நிலை – 22
உதவி மேலாளர் (திட்டங்கள்)
(தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: Degree in Civil Engineering and Master Degree in Business Administration படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருடங்கள் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: நிலை – 22
உதவி இயக்குநர் புள்ளியியல் (பொருளாதாரம் மற்றும் புள்ளியியல்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: Degree in Statistics or Mathematics or Economics or Applied Economics or Business or Master’s Degree in Statistics or Mathematics or Economics or Applied Economics or Applied Statistics or Applied Mathematics or Business Economics or Operation Research or Mathematical Economics or Econometrics படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 22
ஆங்கில நிருபர் (தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை)
காலியிடங்களின் எண்ணிக்கை: 5
கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 22
தமிழ் நிருபர் (தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 22
உதவி இயக்குநர் (நகர் மற்றும் ஊரமைப்பு)
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: Post Graduate Degree in Town or City or Urban or Housing or Country or Rural or Infrastructure or Regional or Transport or Environmental Planning படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 22
உதவி கண்காணிப்பாளர் (வேதியியல்)
(சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Degree in Chemical Engineering படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருடங்கள் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: நிலை – 22
உதவி இயக்குநர் தொழிற்சாலை மற்றும் வர்த்தகம் (அளவீடு மற்றும் புள்ளியியல்)
(சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: Master’s degree in Statistics or Mathematics or Economics படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 22
உதவி திட்டமைப்பாளர் (சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 6
கல்வித் தகுதி: Bachelors Degree in Planning படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருடங்கள் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: நிலை – 22
உளவியலாளர் (சிறைச்சாலை மற்றும் சீர்திருத்தச் சேவைகள்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: Master’s Degree in Psychology படித்திருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம்: நிலை – 22
முதுநிலை கணக்கு அலுவலர்
(சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் கழகம்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Chartered Accountant or Cost Accountant படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம்: நிலை – 22
ஆராய்ச்சி உதவியாளர்
(கால்நடை தடுப்பு மருத்துவ நிறுவனம், இராணிப்பேட்டை)
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: M.V.Sc., (Micro-biology / Pathology / Parasitology / Dairy Microbiology / Animal Biotechnology) படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 22
சமூகவியலாளர் (காவல்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Post Graduate Degree in Sociology படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 22
முதுநிலை பூச்சியியல் நிபுணர்
(பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவம்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 33
கல்வித் தகுதி: B.Sc.(Hons.) or M.A. Degree or the M.Sc. degree in Zoology or M.Sc., Degree in Medical Entomology படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருடங்கள் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: நிலை – 22
உதவி இயக்குநர் பயிற்சி/ முதல்வர், தொழில்துறை பயிற்சி நிறுவனம்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: A degree in any branch of Engineering or Technology படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருடங்கள் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: நிலை – 22
உதவி இயக்குநர் (தொழில்நுட்பம்) தொல்லியல்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: M.A degree in Archaeology/ Ancient History and Archaeology; Ph.D. in Archaeology/ Ancient History and Archaeology/ History and Archaeology / Tamil and Archaeology / Epigraphy and Archaeology படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 22
கால்நடை உதவி மருத்துவர்
(கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 216
கல்வித் தகுதி: B.V.Sc., Degree / B.V.Sc., & A.H படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 22
உதவி மேலாளர்
(தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
கல்வித் தகுதி: Degree in Engineering (Mechanical / Electrical and Electronics / Computer Science and Engineering / Information Technology / Electronics and Communication Engineering) படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 22
உதவி மேலாளர்
(தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: Post Graduate in Statistics or Economics படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை – 22
வயதுத் தகுதி: 01.07.2025 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். சில பணியிடங்களுக்கு வயது வரம்பு கூடுதலாக இருக்கும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வுக் கட்டணம்: எழுத்துத் தேர்வு ரூ.100, இருப்பினும் SC, SC(A), ST, MBC(V), MBC - DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.
விண்ணப்பம் செய்வது எப்படி?
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், தங்களது கல்வி மற்றும் பிறச் சான்றிதழ்களை கையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.06.2025
இந்த வேலை வாய்ப்பு குறித்து மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.