தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி என்னும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு நிரப்பபடுகிறது.
பணியிடங்களுக்கு ஏற்ப குரூப் 1, 2, 2ஏ, 4 உள்பட பல்வேறு பிரிவுகளாக தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான (நேர்முக தேர்வு பதவிகள்) - II தேர்வு இன்றும், நாளையும் (நவ.18,19) நடைபெறுகிறது.
இந்த தேர்வின் மூலம் தமிழக அரசின் தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் கழகம், மாநில தொழில் மேம்பாட்டு கழகத்தில் மேலாளர், துணை மேலாளர், தமிழ்நாடு சட்ட மற்றும் உயர்கல்வித்துறை கல்லூரிகளில் உள்ள லைப்ரேரியன், தமிழக சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டு கழகத்தில் அக்கவுண்ட் ஆபிசர் உள்பட மொத்தம் 105 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இந்த தேர்வு மொத்தம் 2 அமர்வுகளாக நடைபெற உள்ளது. தேர்வர்கள் காலையில் 8.30 மணிக்கும், மதியம் 1.30 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும். அதோடு சலுகை நேரமாக காலை 9 மணி வரையும், மதியம் 2 மணி வரையும் வழங்கப்படும். அதன்பின் வருபவர்கள் தேர்வு மையத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
காலை 9.30 மணிக்கும், மதியம் 2.30 மணிக்கும் தேர்வுகள் தொடங்கும். அனைத்து தேர்வர்களும் மேலே குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக தேர்வு மைத்திற்குள் இருக்க வேண்டும். மேலே குறிப்பிட் சலுகை நேரத்திற்கு பிறகு எந்த ஒரு தேர்வரும் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“