Advertisment

TNPSC; தமிழ்நாடு அரசில் சூப்பர் வேலைவாய்ப்பு; உடனே அப்ளை பண்ணுங்க!

TNPSC அறிவிப்பு; தமிழ்நாடு அரசு வேலை; சமூக அலுவலர் மற்றும் தொழிற்கல்வி அலுவலர் பணியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
Tamil News, Tamil News Today Latest Updates

Tamil News Headlines LIVE

TNPSC Community officer, Vocational counsellor recruitment 2022 apply soon: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தமிழ்நாடு மருத்துவ சேவைகளின் மருத்துவ கல்வித்துறையில் தொழிற்கல்வி ஆலோசகர் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சமூக அலுவலர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 16 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 26.08.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இதையும் படியுங்கள்: TNPSC Group 4 Cut Off: குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு கட் ஆஃப், முந்தைய ஆண்டுகளை விட குறையுமா?

தொழிற்கல்வி ஆலோசகர் - மருத்துவ கல்வித்துறை (Vocational Counsellor in Medical Education Department)

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Post-Graduation in Social Work with Medical and Psychiatric Social Work படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.07.2022 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC  DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது.

சம்பளம் : ரூ.36,200 – 1,33,100

சமூக அலுவலர் (Community Officer)

காலியிடங்களின் எண்ணிக்கை: 11

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Master’s Degree in Social Work படிப்பு முடித்திருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 01.07.2022 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC  DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது.

சம்பளம் : ரூ.35,600 – 1,30,800

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு கணினி வழி எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். முதல் தாளில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இதில் 200 வினாக்கள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.

இரண்டாம் தாள் இரண்டு பிரிவுகளாக நடைபெறும். முதல் பிரிவு தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இதில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்ப்படும். இந்த தேர்வில் 60 மதிப்பெண்கள் எடுப்பது கட்டாயம். இல்லையென்றால் பிற தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. இது தகுதித் தேர்வு மட்டுமே. இந்த மதிப்பெண்கள் மொத்த மதிப்பெண்களில் சேர்த்துக் கொள்ளப்படாது.

இரண்டாம் பிரிவில், பொது அறிவில் 100 வினாக்களும் கேட்கப்படும். இதில் பொது அறிவில் 75 வினாக்களும், கணிதப்பகுதியில் 25 வினாக்களும் இடம்பெறும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.

எழுத்து தேர்வு நடைபெறும் நாள் : 12.11.2022, 13.11.2022

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வுக் கட்டணம் : ரூ. 100, இருப்பினும் SC, SC(A), ST, MBC(V), MBC - DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:  விண்ணப்பிக்க விரும்புபவர்கள்  www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.08.2022

இது குறித்து மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/VOC%20&%20CO_English.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tnpsc Tamil Nadu Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment