TNPSC Departmental Exams Date: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் துறைத் தேர்வுகளுக்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில், துறைத் தேர்வுகள் இந்த மாதம் 22ம் தேதியில் இருந்து 30ம் தேதி வரையில் ( கிரிஸ்துமஸ் பண்டிகை நீங்கலாக ) நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய இரு தேதிகளில் நடத்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை வெளியாகியது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தற்போது துறைத் தேர்வுக்கான தேதியை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. ஜனவரி 5 முதல் 12ம் தேதி வரையில் இந்த துறைத் தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.
ஏனெனில், உள்ளாட்சித் தேர்தலில் அரசு அதிகாரிகளின் பங்கு மிக முக்கியமாக கருதப்படுகிறது. ஒரு தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு தேவைப்படும் முழு மனித வளத்தைக் கொடுக்க தமிழக அரசு கடமைப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு – துறைத்தேர்வுகள் என்றால் என்ன?
ஏற்கனவே, அரசு பணியில் இருப்போர், அடுத்தடுத்த பதவி உயர்வுக்கு செல்வதற்காக நடத்தப்படும் தேர்வு துறைத்தேர்வாகும். எனவே, அரசு வேலை வாங்குவதற்காக இந்த தேர்வை எழுத முடியாது. தமிழக அரசில் கிட்டத்தட்ட 40 துறைகள் உள்ளன. ஒவ்வொருத் துறையிலும் இந்த துறைத் தேர்வு நடத்துவது வழக்கம். இந்த தேர்வை டிஎன்பிஎஸ்சி நடத்துகிறது.
இதுபோன்ற துறைத் தேர்வுக்கு,தேர்வர்கள் சில புத்தகத்தை எடுத்து செல்வதற்கும் அனுமதிக்கப்படுகிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் தேர்வு கட்டணமாக ரூ.200 செலுத்தப்படவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, இங்கே கிளிக் செய்யவும்