அசிஸ்டெண்ட் இஞ்ஜினியர் மற்றும் ஜூனியர் ஆர்க்கிடெக்ட் பணியிடங்களை நிரப்பும் வகையில் டிஎன்பிஎஸ்சி அமைப்பால் நடத்தப்பட்ட தமிழ்நாடு ஒருங்கிணைந்த இஞ்ஜினியிரிங் சர்வீஸ் தேர்வுகளின் முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்வுகள், ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் தேர்வர்கள் அடுத்ததாக நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும். நேர்காணல், 70 மதிப்பெண்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த நேர்காணலிலும் வெற்றி பெறும் தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்பு நடவடிக்கைக்கான அறிவுறுத்தல் கடிதம் தபாலில் அனுப்பப்பட மாட்டாது என்றும், தேர்வாணைய இணையதளத்தை அவ்வப்போது பார்த்து வர, தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
எழுத்துத்தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தபிறகு, அசிஸ்டெண்ட் இஞ்ஜினியர் மற்றும் ஜூனியர் ஆர்கிடெக்ட் பணியிடங்களுக்கு தேர்வானவனர்களின் இறுதிப்பட்டியல் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு இந்த தேர்வுகள், மே 20 மற்றும் 27ம் தேதிகள் என இரண்டு கட்டமாக நடத்தப்பட்டு, ஜூலை மாதம் தேர்வு முடிவுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.