scorecardresearch

தமிழக அரசுப் பணி முக்கிய தேர்வுகள் தள்ளிவைப்பு: டிஎன்பிஎஸ்சி

TNPSC exams counselling postponed due to corona surge: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் குறையாத காரணத்தால் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தனது தேர்வு நடைமுறைகளை ஒத்திவைத்துள்ளது

தமிழக அரசுப் பணி முக்கிய தேர்வுகள் தள்ளிவைப்பு: டிஎன்பிஎஸ்சி

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் குறையாத காரணத்தால் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தனது தேர்வு நடைமுறைகளை ஒத்திவைத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக கொரோனா தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 30,000ஐ கடந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது. ஊரடங்கின் காரணமாக கொரோனா பாதிப்புகள் குறைந்தாலும், நிலைமை இன்னும் சீராகவில்லை.

நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு

இந்த நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் 08.06.2021 முதல் 11.06.2021 வரை நடைபெறவிருந்த போக்குவரத்து வாகன ஆய்வாளர் நிலை- II, தமிழ்நாடு போக்குவரத்து சார்நிலைப் பணிகள் 2013-2018, பணிக்கான நேர்முகத் தேர்வு, தற்போது நிலவும் கொரோனா தொற்று காரணமாக தள்ளி வைக்கப்படுகிறது. மேற்படி பதவிக்கான நேர்முகத் தேர்வின் மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வு ஒத்திவைப்பு

இதேபோல், உதவி பொறியாளர் பணிகளுக்கான கலந்தாய்வு தேதியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதாவது, அறிவிக்கை எண் 18/2019, 29.05.2019ல் வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் 2008-2019, 1.உதவி மின் ஆய்வாளர், 2. உதவி பொறியாளர் (மின்சாரம்) (பொதுப்பணித்துறை) மற்றும் 3. தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குனர் பதவிகளுக்கான கலந்தாய்வு தேதியும் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

துறைத் தேர்வுகள் ஒத்திவைப்பு

22.06.2021 முதல் 30.06.2021 வரை நடைபெறவிருந்த துறைத் தேர்வுகள் மே 2021, ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் முடிவுகள் வெளியிடப்படாத 14 துறைத் தேர்வுகளின் முடிவுகள் 20.07.2021 அன்று வெளியிடப்படும். விண்ணப்பதாரர்களின் நலன் கருதி துறைத் தேர்வுகள் மே 2021 க்கு விண்ணப்பத்திற்கான கடைசி தேதி 31.07.2021 என மாற்றம் செய்யப்படுகிறது. இத்தேர்வானது ஆகஸ்ட் 2021ல் நடத்தப்படும். மேற்படி தேர்வுக்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு தேர்வாணையத்தால், தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tnpsc exams counselling postponed due to corona surge

Best of Express