Advertisment

TNPSC தேர்வில் இதை மட்டும் மறந்துடாதீங்க... 5 மார்க் மைனஸ் ஆயிடும்!

TNPSC New Rules and Instructions for Examination: ஏதேனும் கேள்விகளுக்கு விடை தெரியவில்லையென்றால் விடைத்தாளில் (E) என்ற வட்டத்தினைக் கருமையாக்க வேண்டும்.

author-image
WebDesk
New Update
டிஎன்பிஎஸ்சி 991 பணியிடங்கள்: பட்டதாரிகள், டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

TNPSC Exams New Important Instruction:  வரும் காலங்களில்,தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கு சில முக்கிய அறிவுரைகள் வெளியிடப்பட்டன. இந்த, அறிவுரையில் உள்ள சில செயல்பாடுகள்    தவறாகும்பட்சத்தில் தேர்வர் பெறும் மொத்த  மதிப்பெண்களிலிருந்து ஐந்து மதிப்பெண்களை  குறைக்கவும் தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது.

Advertisment

இதுகுறித்து, தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்

"காலை 9.15 மணிக்குள் தேர்வுக்கூடத்திற்குச் சென்றடைய வேண்டும். இதற்கு முன்னர் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கு தேர்வு தொடங்கும் வரை தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது இந்த நடைமுறை கைவிடப்பட்டுள்ளது. காலை 9.15 மணிக்குப் பிறகு வரும் தேர்வர்கள் யாரும் தேர்வுக்கூடத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்.

TNPSC Important instructions to candidates

விடைத்தாளில் விவரங்களைப் பூர்த்தி செய்யவும், விடைகளை குறிக்கவும் கருப்பு நிற மை உடைய பந்து முனைப் பேனாவை (black ball pen) மட்டுமே பயன்படுத்த வேண்டும். பென்சில், ஏனைய நிற மைப் பேனாக்களை பயன்படுத்தக் கூடாது.

விடைத்தாளில் உரிய இடங்களில் (இரு இடங்களில்) கையொப்பமிட்டு, இடது கைப் பெருவிரல் ரேகையினைப் பதிக்க வேண்டும்.

இவ்வாறு செய்யும் போது விடைத்தாளில் மற்ற இடங்களில் மை படாமலும் மற்றும் விடைத்தாள் எவ்வகையிலும் சேதமடையாமலும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்குள் ஏதேனும் கேள்விகளுக்கு விடை தெரியவில்லையென்றால் விடைத்தாளில் (E) என்ற வட்டத்தினைக் கருமையாக்க வேண்டும்.

விடைத்தாளில் ஏ, பி, சி, டி மற்றும் (இ) என்று ஒவ்வொரு விடைக்கும் எத்தனை வட்டங்கள் கருமையாக்கப்பட்டுள்ளன என்று எண்ணி அந்த மொத்த எண்ணிக்கையை உரிய கட்டங்களில் நிரப்பி கருமையாக்க வேண்டும். இந்த எண்ணிக்கை தவறாகும்பட்சத்தில் தேர்வர் பெறும் மதிப்பெண்களிலிருந்து ஐந்து மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

ஆதலால் இதனைக் கவனத்துடன் பிழையில்லாமல் சரியாக எழுதி கருமையாக்கப்பட்டுள்ளதா என்று உறுதி செய்துகொள்ள வேண்டும்.

இச்செயலைக் செய்வதற்கு மட்டுமே ஒவ்வொரு தேர்வருக்கும் தேர்வு நேரம் முடிவுற்ற பிறகு 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும்.

அதாவது, 1 மணி முதல் 1.15 மணி வரை இந்தச் செயல்பாட்டினை செய்து முடித்து விடைத்தாளினைத் தேர்வு அறைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.

மேற்கூரிய அம்சங்கள் தேர்வர்களின் நலனுக்காகவும், எவ்வித தவறுகளும் நிகழாமல் தவிர்ப்பதற்காகவும் தேர்வாணையத்தால் அறிமுகப்படுத்திச் செயல்படுத்தப்பட உள்ளது"

இவ்வாறு, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் இரா. சுதன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment