/tamil-ie/media/media_files/uploads/2019/06/template-30-3.jpg)
iimcat.ac.in, iift.nta.nic.in, cat 2019, cat 2019 exam date, cat exam date, iim cat 2019, IIFT exam,
TNPSC Group 4 Answer Key 2019 @tnpsc.gov.in: டி.என்.பி.எஸ்.சி தேர்வு வரலாற்றில் இப்போது நடந்த குரூப் 4 தேர்வுக்குதான் விடைத்தாள் ( Answer Key) வெளியிட இவ்வளவு தாமதம் ஆகியிருக்கிறது. இதற்கு முந்தைய தேர்வுகள் பலவற்றில் அதிகபட்சம் 4 நாட்கள், சில தேர்வுகளில் தேர்வு முடிந்த மறுநாளே விடைத்தாள் வெளியிட்ட வரலாறும் இருக்கிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் செப்டம்பர் 1-ம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. ஆறாயிரத்திற்கும் அதிகமான காலிப் பணியிடங்களுக்கு 13 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வு எழுதினர். தேர்வு முடிந்து 10 நாட்கள் நெருங்கும் சூழலிலும், விடைத்தாளை அதிகாரபூர்வமாக டி.என்.பி.எஸ்.சி வெளியிடவில்லை.
TNPSC Group 4 2019: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
இதனால் 13 லட்சத்திற்கும் அதிகமான தேர்வர்கள், தங்களுக்கு கிடைக்கும் மதிப்பெண்கள், கட் ஆஃப் மதிப்பெண் ஆகியவற்றை அறிய அலைமோதி வருகிறார்கள். இதற்கு முந்தைய தேர்வுகள் சிலவற்றில் எத்தனை நாட்களில் விடைத்தாள் வெளியானது என்கிற தகவலை இங்கு காணலாம்.
1. கால்நடைத்துறையில் ரிசர்ச் அசிஸ்டண்ட் பணிக்கு கடந்த ஜூன் 30-ம் தேதி தேர்வு நடந்தது. ஆன்ஸ்வர் கீ வெளியான நாள், ஜூலை 3.
2. பள்ளிக் கல்வித்துறையில் மாவட்டக் கல்வி அலுவலர் பணிக்கு ஜூலை 29-ம் தேதி தேர்வு நடைபெற்றது. ஆன்ஸ்வர் கீ வெளியான நாள் ஆகஸ்ட் 2.
3. பொறியாளர்களுக்கான கம்பைண்ட் என்ஜினீயரிங் சர்வீஸ் தேர்வு ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெற்றது. ஆகஸ்ட் 14-ம் தேதி ஆன்ஸ்வர் கீ வெளியானது.
4. சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு டிஜிபி அலுவலக சோசியாலஜிஸ்ட் மற்றும் எக்கனாமிஸ்ட் பணிக்கான தேர்வு நடைபெற்றது ஆகஸ்ட் 24-ம் தேதி. ஆன்வர் கீ வெளியான தேதி ஆகஸ்ட் 28.
5. வனத்துறையில் ஜூனியர் சயிண்டிபிக் ஆபீசர் பணிக்கு தேர்வு நடைபெற்றது ஆகஸ்ட் 24-ம் தேதி. ஆன்ஸ்வர் கீ வெளியான தேதி செப்டம்பர் 5. (முதல் முறையாக இந்தத் தேர்வுக்குத்தான் ஆன்ஸ்வர் கீ வெளியிட 12 நாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதேபோல குரூப் 4 தேர்வுக்கும் தாமதமாகியிருக்கிறது).
டெக்னாலஜியில் கலக்கும் 103 வயது சென்னை இளைஞர்: ஃபிட்னஸ் ரகசியம் சொல்கிறார் கேளுங்க...
ஓரிரு தேர்வுகளில் தவறான விடைத்தாள் வெளியாகி, அது நீதிமன்றம் வரை புகாராக சென்றதால்தான் விடைத்தாள் வெளியிடுவதில் டி.என்.பி.எஸ்.சி நிதானத்தை கடைபிடிப்பதாக கூறப்படுகிறது. எனினும் விடைத்தாள் தயாராகிவிட்டதால் எந்த நேரமும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படலாம் என தேர்வுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.