TNPSC Group 1 Prelims Results 2024: டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்வது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், உதவி ஆணையர் வணிக வரித்துறை, துணைப் பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள், உதவி இயக்குனர் ஊரக வளர்ச்சி துறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அலுவலர் உள்ளிட்ட பதவிகள் அடங்கிய குரூப் 1 முதல்நிலை தேர்வை கடந்த ஜூலை 13 ஆம் தேதி நடத்தியது. அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 90 பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடைபெற்றது. சுமார் 1.59 லட்சம் பேர் குரூப் 1 தேர்வை எழுதியிருந்தனர்.
இந்தநிலையில், குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. தேர்வு நடந்து முடிந்த 50 நாட்களுக்குள் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரிசல்ட் செக் செய்வது எப்படி?
முதலில் டி.என்.பி.எஸ்.சி-யின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்திற்குச் செல்லவும்.
முகப்பு பக்கத்தில் சமீபத்திய செய்திகளில் குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் என்பதை கிளிக் செய்யவும்.
அடுத்தப் பக்கத்தில் முதல்நிலை தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரங்கள் அடங்கிய இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும்.
அதனை கிளிக் செய்தால் புதிய பக்கத்தில் தேர்வு செய்யப்பட்ட தேர்வர்களின் தேர்வெண்கள் கொடுப்பட்டிருக்கும். இதன்மூலம் தேர்வானவர்களின் விபரங்களை தெரிந்துக் கொள்ளலாம்.
அல்லது நேரடியாக தெரிந்துக் கொள்ள இந்த இணைய இணைப்பை கிளிக் செய்யவும்: டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 ரிசல்ட்
முதல்நிலைத் தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்கள் செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதிக்குள் இ-சேவை மையங்கள் மூலம் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும் குரூப் முதன்மைத் தேர்வுகள் டிசம்பர் 10 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை நடைபெறும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“