Advertisment

TNPSC குரூப் 1 தேர்வு; 90 பணியிடங்கள்; டிகிரி முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

TNPSC குரூப் 1 தேர்வு அறிவிப்பு; தமிழ்நாடு அரசில் துணை ஆட்சியர், டி.எஸ்.பி வேலை; டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
 TN minister thangam thennarasu On  TNPSC Group 2 and 2A Result Tamil News

TNPSC குரூப் 1 தேர்வு அறிவிப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகள் அடங்கிய குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 90 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 27.04.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

பதவி வாரியான காலியிட விவரம்

துணை ஆட்சியர் (Deputy Collector) – 16

காவல் துணை கண்காணிப்பாளர் (Deputy Superintendent of Police) – 23

உதவி ஆணையர், வணிக வரித்துறை (Assistant Commissioner (Commercial Taxes)) – 14

துணைப் பதிவாளர், கூட்டுறவு சங்கங்கள் (Deputy Registrar of Cooperative Societies) – 21

உதவி இயக்குனர், ஊரக வளர்ச்சி துறை (Assistant Director of Rural Development) – 14

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (District Employment Officer) – 1

மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அலுவலர் (District Officer (Fire and Rescue Services)) - 1

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வணிகவியல், பொருளாதாரம், சமூகவியல் போன்ற படிப்புகளை படித்தவர்களுக்கு சில பதவிகளில் முன்னுரிமை வழங்கப்படும்.

வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 21 வயது முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC  DNC, MBC, BC and BCM பிரிவினர் 39 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ.56,100 – 2,05,700

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

முதல்நிலைத் தேர்வு 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். இதில் 175 வினாக்கள் பொது அறிவு பகுதிகளில் இருந்தும், 25 வினாக்கள் கணிதப் பகுதியிலிருந்தும் கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள் : 13.07.2024

முதன்மைத் தேர்வு நான்கு தாள்களாக நடைபெறும். முதல் தாள் தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இந்த தேர்வில் 40 மதிப்பெண்கள் எடுப்பது கட்டாயம். இல்லையென்றால் பிற தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. இது தகுதித் தேர்வு மட்டுமே. இந்த மதிப்பெண்கள் மொத்த மதிப்பெண்களில் சேர்த்துக் கொள்ளப்படாது.

அடுத்த மூன்று தாள்களும், பொது அறிவு பகுதியை சார்ந்தவை. ஓவ்வொரு தாளும் தலா 250 மதிப்பெண்களுக்கு நடைபெறும். கேட்கப்படும். இதற்கான கால அளவு தலா 3 மணி நேரம். முதன்மைத் தேர்வுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கபடுவர். நேர்முகத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வுக் கட்டணம் : முதல்நிலைத் தேர்வு ரூ.100, முதன்மைத் தேர்வு ரூ. 200, இருப்பினும் SC, SC(A), ST, MBC(V), MBC - DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். 

ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், தங்களது கல்வி மற்றும் பிறச் சான்றிதழ்களை கையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.04.2024

இது குறித்து மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/ என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tnpsc Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment