டிஎன்பிஎஸ்சி குரூப் I, யுபிஎஸ்சி தேர்வு : முக்கிய பொது அறிவு தொகுப்புகள் இங்கே

இது போன்ற தேர்வுகளில் பொது நிகழ்வு(Current Affairs) கேள்விகள் மிக முக்கியமாக கருதப்படுகிறது . பிப்ரவரி பின்பகுதியில் நடந்த சில முக்கிய Current Affairs-கள் இங்கே:  

By: Updated: March 5, 2020, 04:34:17 PM

டிஎன்பிஎஸ்சி குரூப் I தேர்வு வரும் ஏப்ரல் ஐந்தாம் தேதி நடைபெறுகிறது. முதல்நிலைத் தேர்வு ஜூலை மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், யுபிஎஸ்சி பிரிலிம்ஸ் தேர்வு மே மாதம் 31-ம் தேதி நடை பெறுகிறது .

இது போன்ற தேர்வுகளில் பொது அறிவு (Current Affairs) கேள்விகள் மிக முக்கியமாக கருதப்படுகிறது . பிப்ரவரி பின்பகுதியில் நடந்த சில முக்கிய Current Affairs-கள் இங்கே

1. பொதுத்துறை வங்கிகளில் பெரும் ஒருங்கிணைப்பை 1.4.2020 முதல் செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் : 

10 பொதுத் துறை வங்கிகளை நான்கு பொதுத் துறை வங்கிகளாகப் பெரும் இணைப்பு செய்வதற்குப்  மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன்படி,

ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், யுனைடெட் பேங்க் ஆப் இண்டியா ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும்-

சிண்டிகேட் வங்கி, கனரா வங்கியுடனும் –

ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை யூனியன் பேங்க் ஆப் இண்டியாவுடனும்-

அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கியுடனும் இணைக்கப்படுகின்றன.

இதனால், 7 பெரிய பொதுத்துறை வங்கிகள் உருவாக்கப்பட்டு, தேசிய அளவில் 8 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறும். இந்தப் பெரும் இணைப்பு உலகளாவிய வங்கிகளுடன் ஒப்பிடும் அளவுக்கு நிலை உயர உதவும். இந்திய அளவிலும், உலக அளவிலும் போட்டியிடவும் முடியும்.

 

2. நிறுவனங்கள் (இரண்டாவது திருத்த) மசோதா, 2019-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மோசடி செய்யப்படாத அல்லது பொதுமக்களின் நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, நிறுவனங்கள் மீதான கிரிமினல் குற்றத்தன்மைகளை நீக்குவதற்கு இந்த மசோதா வகை செய்கிறது. நாட்டின் குற்றவியல் நீதி முறையில் மேலும் தடங்கலைத் தவிர்க்க இது உதவும். இந்த மசோதா சட்டத்துக்கு உட்பட்டு நடக்கும் நிறுவனங்கள் அச்சமின்றி செயல்பட உதவும்.

நிறுவனங்கள் சட்டத்தின் பல்வேறு ஷரத்துக்களை செயல்படுத்துவதில் ஏற்பட்ட சிரமங்களை தவிர்க்கும் வகையில், சட்டத்தில் சில திருத்தங்கள் செய்து நிறுவனங்கள் (திருத்த) சட்டம் 2015 இயற்றப்பட்டது.

 

3. சிவில் விமானப் போக்குவரத்தில் வெளிநாட்டு நேரடி முதலீட்டுக் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்

ஏர் இண்டியா நிறுவனத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் 100 சதவீதம் வரை முன்அனுமதிப் பெறாமல் முதலீடு செய்ய அனுமதிக்கும் வகையில், தற்போதுள்ள வெளிநாட்டு முதலீடு அனுமதிக் கொள்கையில் திருத்தம் செய்ய  மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தற்போது விமானப் போக்குவரத்து சேவை / உள்நாட்டுப் பயணிகள் விமான சேவை ஆகியவற்றில் 100 சதவீத வெளிநாட்டு நேரடி முதலீடு என்பது அனுமதி பெறாமல் 49 சதவீதமாகவும், அதற்கும் கூடுதலானது அரசு அனுமதி பெற்றும் என உள்ளது. இருப்பினும், விமானப் போக்குவரத்து சேவை / உள்நாட்டுப் பயணிகள் விமான சேவை ஆகியவற்றில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் 100 சதவீத வெளிநாட்டு நேரடி முதலீடு அனுமதி பெறாத வகையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

1937 ஆம் ஆண்டின் விமானப்போக்குவரத்து விதிகளின் படி வெளிநாட்டு நேரடி முதலீடு என்பது இந்திய நாட்டினராக இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும். இருப்பினும், தற்போதைய கொள்கையின் படி, ஏர் இண்டியா நிறுவனத்தைப் பொறுத்தவரை, வெளிநாட்டு விமான நிறுவனங்கள் உட்பட நேரடியான அல்லது மறைமுகமான முதலீடு 49 சதவீதத்திற்கும் கூடுதலாக இருக்கக்கூடாது. எனவே, விமானப் போக்குவரத்து சேவை / உள்நாட்டுப் பயணிகள் விமான சேவை ஆகியவற்றில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் நேரடி முதலீடு 100 சதவீதம் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், ஏர் இண்டியா நிறுவனத்தில் 49 சதவீதம் மட்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.

 

4. புந்தேல்காண்ட் விரைவுச்சாலை திட்டம் – பிரதமர் அடிக்கல் நாட்டினர்

புந்தேல்காண்ட் விரைவுச்சாலை திட்டத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி சித்ரகூட்-டில் 29 பிப்ரவரி 2020 அன்று அடிக்கல் நாட்டினார் .

மத்திய அரசால் பிப்ரவரி 2018-ல் அறிவிக்கப்பட்ட உத்தரப்பிரதேச பாதுகாப்பு தொழில் வழித்தட திட்டத்திற்கு இந்த விரைவுச்சாலை உதவிகரமாக இருக்கும்.

உத்தரப்பிரதேச மாநில அரசால் அமைக்கப்படும் புந்தேல்காண்ட் விரைவுச்சாலை, சித்ரகூட், பாண்டா, ஹமீர்பூர் மற்றும் ஜலோன் மாவட்டங்கள் வழியாக செல்லும். இந்த விரைவுச்சாலை ஆக்ரா-லக்னோ விரைவுச்சாலை மற்றும் யமுனா விரைவுச்சாலை வழியாக, புந்தேல்காண்ட் பகுதியை தலைநகர் தில்லியுடன் இணைக்கும் வகையில் அமைவதுடன் புந்தேல்காண்ட் பகுதியின் வளர்ச்சியிலும் முக்கியப் பங்கு வகிக்கும்.

 

296 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்படும் இந்த விரைவுச்சாலை மூலம், சித்ரகூட், பாண்டா, மஹோபா, ஹமீர்பூர், ஜலோன், ஒரையா மற்றும் எடாவா மாவட்டங்கள் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தரைப்படையில் பயன்படுத்தக் கூடிய சாதனங்கள் முதல், கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக்கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், பிறவகையான ஆயுதங்கள் மற்றும் எச்சரிக்கை கருவிகள் வரை ராணுவ தளவாடங்களுக்கு இந்தியாவில் பெருமளவு தேவை உள்ளது. 2025 ஆம் ஆண்டு வாக்கில் 250 பில்லியன் டாலர் அளவிற்கு தேவை உள்ளது.

இந்த தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏதுவாக, லக்னோவில் 21, பிப்ரவரி 2018-ல் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டின் போது உத்தரப்பிரதேசத்தில் பாதுகாப்பு தொழில் வழித்தடம் அமைக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த 6 இடங்களை தேர்வு செய்துள்ளது. லக்னோ, ஜான்சி, சித்ரகூட், அலிகார், கான்பூர், ஆக்ரா ஆகிய இந்த 6 இடங்களில், ஜான்சி மற்றும் சித்ரகூட் ஆகியவை புந்தேல்காண்ட் பகுதியில் அமைக்கப்பட உள்ளன. இவற்றுள் ஜான்சியில் அமைக்கப்படும் தொழில் வழித்தடம் மிகப் பெரியதாக அமைய உள்ளது.

ஜான்சி மற்றும் சித்ரகூட் ஆகிய இரு இடங்களிலும், சாகுபடி நடைபெறாத நிலங்கள்தான் இத்திட்டத்திற்காக வாங்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் உள்ள ஏழை விவசாயிகள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர்.

நன்றி- pib

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Education-jobs News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Tnpsc group 1 exam upscexam current affairs prelims strategy

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X