Advertisment

குரூப் 1 தேர்வுக்கு தயாரா? “அவசர நிலை பிரகடனம்” பற்றி தெரியுமா?

மாநில பட்டியலில் இடம் பெற்றுள்ள விவகாரங்கள் மீது மத்திய அரசுக்கு சட்டமியற்றும் அதிகாரமும் உள்ளது. ஆனால் அவசர நிலை பிரகடனம் முடிவுக்கு வந்த 6 மாதங்களில் அந்த சட்டங்கள் காலாவதியாகிவிடும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
குரூப் 1 தேர்வுக்கு தயாரா? “அவசர நிலை பிரகடனம்” பற்றி தெரியுமா?

TNPSC group 1 exams : இந்தியாவில் குடிமைப் பணிகளுக்கு தயாராகும் ஒவ்வொருவரும் கட்டாயமாக நேஷ்னல் எமர்ஜென்சி பற்றி படித்து தெரிந்திருப்பது அவசியம். நேஷ்னல் எமர்ஜென்சி மட்டுமின்றி இந்தியாவின் வரலாறு, அதிகார மட்டங்களில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் முக்கிய மசோதாக்கள், சட்டங்கள், அரசியல் அமைப்பு என அனைத்து குறித்தும் தெரிந்திருக்க வேண்டியது கட்டாயம். உங்களின் அதிகப்படியான தேடல் நேரங்களை குறைக்கும் வகையில் மிக எளிமையாக தேசிய அவசரநிலை பிரகடனம் குறித்த வரலாற்று தரவுகளை நாங்கள் இங்கே தருகின்றோம்.

Advertisment

அரசியமைப்பில் அவசர நிலை குறித்த பிரிவுகள் எங்கே உள்ளது?

இந்திய அரசியலமைப்பில் உள்ள 18வது பகுதியின் (XVIII) உட்பிரிவு 352 முதல் 360 வரை அவசர நிலை குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. எந்தெந்த காரணங்களுக்காக அவசர நிலை அமல்படுத்தப்படுகிறது? யாரால் அமல்படுத்தப்பட வேண்டும்? அமல்படுத்த/நீக்க நாடாளுமன்ற அவைகளின் பங்கு என்ன? அவசர நிலை இருக்கும் போது மாநில உரிமைகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறது? அடிப்படை உரிமைகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறது? அவசர நிலை பிரகடனத்தின் போது குடியரசு தலைவரின் பங்கு என்ன? ஒருவேளை இந்த காலங்களில் தனிநபர் ஒருவரின் அடிப்படை உரிமைகள் அரசால் மீறப்பட்டால் அதற்கு நீதி கிடைக்குமா என்பது போன்ற பல்வேறு விவகாரங்கள் பதில் பட்டியல் இடப்பட்டுள்ளது.

அவசர நிலைகள் எவ்வாறு பட்டியலிடப்பட்டுள்ளது?

மூன்று வகையான அவசர நிலைகள் குறித்து அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

National Emergency (தேசிய நெருக்கடி நிலை)

President Rule (குடியரசு தலைவர் ஆட்சி)

Financial Emergeny (நிதி நெருக்கடி நிலை)

இந்த மூன்றில் இன்று நாம் தேசிய நெருக்கடி நிலை குறித்து அறிந்து கொள்வோம்

எத்தகைய சூழலில் தேசிய நெருக்கடி நிலை அறிவிக்கப்படுகிறது?

இந்தியா மீது பிற நாட்டவர் போர் தொடுத்து வருகின்ற காலகட்டத்திலோ அல்லது உள்நாட்டில் ஆயுதமேந்திய வன்முறை மற்றும் கலவரங்கள் ஏற்படுகின்ற பட்சத்தில் அவசரநிலை பிரகடனம் நாடு முழுவதும் (அ) குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் அமல்படுத்தப்படுகிறது. நாட்டின் எல்லைகளுக்கு வெளியில் இருந்து தாக்குதல் நடைபெறும் பட்சத்தில் அது External Emergency என்ற பெயரிலும் , ஆயுதமேந்திய போராட்டக்குழு உள்நாட்டில் போர் சூழலை உருவாக்கும் போது Internal Emergeny என்ற பெயரிலும் அவசர நிலை அறிவிக்கப்படுகிறது. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்நாட்டு இடையூறு (Internal Disturbance) என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்த ஒரே காரணம் தான் 1975அம் ஆண்டு இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு அவசர நிலை பிரகடனத்தை அறிவிக்க வழி வகை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அவசர நிலை பிரகடனத்தின் போது மத்திய மற்றும் மாநில அரசுகளில் ஏற்படும் நிர்வாக ரீதியிலான மாற்றங்கள் என்ன?

இந்தியா ஒரு கூட்டாட்சி தத்துவத்தில் அமைக்கப்பட்ட நாடு என்றாலும் கூட அவசர நிலை அமலில் இருக்கும் போது ஒற்றை ஆட்சி முறையில் இந்திய நிர்வாகம் இயங்கும். மாநில அரசுகள் முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். ஆனாலும் மாநில அரசுகளின் ஆட்சிகள் கலைக்கப்படாது.

மாநில பட்டியலில் இடம் பெற்றுள்ள விவகாரங்கள் மீது நாடாளுமன்றத்திற்கு சட்டமியற்றும் அதிகாரமும் உள்ளது. ஆனால் அவசர நிலை பிரகடன் முடிவுக்கு வந்த 6 மாதங்களில் அந்த சட்டங்கள் காலாவதியாகிவிடும்.நாடாளுமன்ற கூட்டத்தொடர்கள் நடைபெறாத பட்சத்தில், மாநில பட்டியலில் இடம் பெற்றுள்ள விவகாரங்களில் குடியரசு தலைவரால் அவசர சட்டம் இயற்ற முடியும்.

அதே போன்று மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதிகளை குறைக்கவோ அல்லது முழுமையாக மறுக்கவோ குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. அவசர நிலை முடிகின்ற போது நடைபெறும் நிதி ஆண்டு முடியும் வரை இந்த நிதிசார் மாற்றங்கள் நடைமுறையில் இருக்கும்.

அவசர நிலை அமலில் இருக்கும் போது நடைபெற்று வரும் நாடாளுமன்றத்தின் காலத்தை நீட்டிக்க இயலும். இந்தியாவில் நாடாளுமன்றம் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை கலைக்கப்பட்டு தேர்தல்கள் மூலம் புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு அரசு அமைக்கப்படுகிறது. ஆனால் அவசர நிலையின் போது ஆண்டுக்கு ஒரு முறை நாடாளுமன்ற காலத்தை ஒரு ஆண்டு வரை நீட்டித்துக் கொள்ளலாம். 1971 முதல் 77 வரை இந்தியாவின் ஐந்தாவது நாடாளுமன்றம் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. எமர்ஜென்சி முடிவுக்கு வந்தவுடன், இந்த நாடாளுமன்ற நீட்டிப்பும் 6 மாதங்களில் (5 ஆண்டுகளை தாண்டியும் அரசு தொடரும் பட்சத்தில்) முடிவுக்கு வருகிறது.

44வது திருத்த சட்டம் 1978

உள்நாட்டு நெருக்கடி நிலை பிரகடனம் தொடர்பான அரசின் அதிகாரங்கள் அனைத்தையும் இந்த திருத்த சட்டம் மட்டுப்படுத்தியது. நெருக்கடி காலத்தில் திருத்தப்பட்ட அரசியல் அமைப்பு சட்டங்களில் சர்ச்சைக்குரிய அனைத்தும் நீக்கம் செய்யப்பட்டது.

காங்கிரஸ் அரசு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பதங்களும் அரசியல் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டது. உள்நாட்டு நெருக்கடி நிலை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த Internal Disturbance என்ற வார்த்தைகள் மாற்றப்பட்டு armed rebellion என்று அமைக்கப்பட்டது.

பிரதமரின் ஆலோசனை அடிப்படையிலேயே உள்நாட்டு நெருக்கடி நிலையை பிரகடனம் செய்யும் முறை நீக்கப்பட்டு அமைச்சர்களின் எழுத்துப்பூர்வ ஒப்புதலை பெற்றே அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட வேண்டும் என்று மாற்றம் கொண்டு வரப்பட்டது.

அவசர நிலை பிரகடனத்திற்கு 38வது திருத்த சட்டம் 1975-ல் நீதி விசாரணையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. 44வது திருத்த சட்டத்தின் போது இந்த அம்சம் முற்றிலுமாக நீக்கப்பட்டது.

அவசர நிலை பிரகடனத்தை அறிவிக்க 2 மாதங்களுக்கு முன்பே நாடாளுமன்ற இரு அவைகளுக்கும் அறிவிக்க வேண்டும் என்ற அம்சம் மாற்றப்பட்டு 1 மாதமாக காலம் குறைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மக்களவை கலைக்கப்பட்டாலோ அல்லது கலைக்கப்படும் நிலையில் இருந்தாலோ மாநிலங்களை ஒப்புதலை பெற்று குடியரசு தலைவர் அவசர நிலை பிரகடனத்தை அறிவிக்க இயலும். புதிய மக்களவை கூடிய பிறகு 30 நாட்களுக்கு அந்த அவசர நிலை பிரகடனம் அமலில் இருக்கும்.

ஆரம்பத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஒப்புதல் கிடைத்தால் அவசர நிலை அமல்படுத்தப்படலாம் என்று இருந்த நிலை நீக்கப்பட்டு இரண்டு அவைகளிலும் சிறப்பு பெரும்பான்மையும், அவையில் இருக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இருபங்கு உறுப்பினர்கள் வாக்களித்தால் மட்டுமே அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் 44வது திருத்த சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

அவசர நிலை வாபஸ்

குடியரசு தலைவர் தன்னுடைய விருப்பத்தின் அடிப்படையில் அவசர நிலையை வாபஸ் பெற முடியும் என்ற நிலையும் மாற்றப்பட்டு 44வது திருத்த சட்டத்தில் புதிய அம்சம் கொண்டு வரப்பட்டது. நாடாளுமன்ற மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வர இயலும்.

Reference : Indian Polity for Civil Service Examinations by M. Lakshmikanth

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment