TNPSC Group 1 Main Exam Result 2019 Declared: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
தமிழக அரசுப் பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க அரசுப்பணியாளர் தேர்வாணையம் எழுத்து தேர்வு நடத்தி வருகிறது. பதவிகளின் அடிப்படையில் குருப் 1, 2, மற்றும் 4 என தேர்வுகள் நடைபெறுகின்றன. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகளுக்குப் பிறகு பணியமர்த்தப்படுகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஜூலை 12 ம் தேதி முதல் 14 ம் தேதி வரை நடந்த குருப்- 1 முதன்மை தேர்வுக்கான முடிவுகளை தேர்வாணையம் இன்று வெளியிட்டது.
துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட 181 உயர் பதவிக்கான பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற அரசு இணையதளத்தில் பார்க்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வரும் 23 ம் தேதி முதல் 31 ம் தேதி வரை நேர்காணல் நடைபெற உள்ளது என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC Group 1 தேர்வு முடிவுகளை எப்படி தெரிந்து கொள்வது?
www.tnpsc.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்
Latest Result என்ற லிங்கை க்ளிக் செய்க
இப்போது அதில் POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION-I (GROUP-I SERVICES) என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அருகில் இருக்கும் தேர்வு முடிவுகள் லிங்கை க்ளிக் செய்ய வேண்டும்.
இப்போது தேர்வு முடிவுகள் அனைத்தும் பி.டி.எப் (PDF) பைலாக இருக்கும். குரூப் 1 முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுடைய தேர்வு எண் அதில் கொடுக்கப்பட்டிருக்கும்
விண்ணப்பதாரர்கள், Ctrl+F மூலம் தங்களுடைய தேர்வு எண்னை டைப் செய்து, தேர்வு முடிவினை தெரிந்து கொள்ளலாம்.