TNPSC Group 1 Result: தமிழக அரசில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் மூலம் ஆட்களை தேர்வு செய்வது வழக்கம்.
அந்த வகையில், துணை ஆட்சியர் மற்றும் துணை கண்காணிப்பாளர் ஆகிய காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வு அறிவிக்கப்பட்டது. இதில் சிவில் சர்வீஸ், வருமான வரித்துறை, காவல் துறை போன்ற பிரிவுகளில் 139 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த மாதம் 3-ம் தேதி நடந்தது.
இந்நிலையில் தற்போது இதன் முடிவுகள் வெளியாகியிருக்கின்றன.
எப்படி தெரிந்துக் கொள்வது?
அதிகாரப்பூர்வ தளமான tnpsc.gov.in. ஐ அணுகவும்.
ரிசல்ட் செக்ஷனை க்ளிக் செய்யவும்.
இப்போது புதிய பக்கம் திறக்கும், அதில் Civil Services I Exam (Group I Services) என்பதை க்ளிக் செய்யவும்.
ரிசல்ட்டின் பி.டி.எஃப் ஃபைல் திறக்கும்.
தேர்வு முடிவுகளைப் பார்த்து விட்டு, டவுன்லோடு செய்து, பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளாவும்.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜூலை 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை குரூப் 1 மெயின் தேர்வுகள் நடைபெறும். இத்தேர்வை எழுத ஏப்ரல் 10 முதல் 20-ம் தேதிக்குள் விண்ணப்பது அவசியம்.