Tamil Nadu Combined Civil Services Group 1: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. பட்டதாரிகளுக்கு இது அருமையான வாய்ப்பு, இதை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.
2019ம் ஆண்டுக்கான கம்பைண்ட் சிவில் சர்வீஸ் எக்ஸாம் (குரூப் 1)-ன் கீழ் 139 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுத் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக காவல் துறை, தமிழக பதிவுத் துறை, தமிழக பொதுத் துறை, தமிழக தீயணைப்புத் துறை ஆகிய துறைகளில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More: TNPSC Notifications 2019: பட்டதாரிகள், பொறியாளர்கள், டிப்ளமோ படித்தவர்கள்... அத்தனை பேருக்கும் தமிழ்நாடு அரசு வேலை
இதற்காக ஜன., 31ம் தேதி வரை ஆன்லைன் விண்ணப்ப பதிவு செய்துகொள்ளலாம். இதற்கான குறைந்தபட்ச வயதுவரம்பு 21. அதிகபட்ச வயது 37(பட்டியல் இனத்தவருக்கு). பொது பிரிவின் கீழ் வருபவர்களுக்கு 32 வயது.
Tamil Nadu Combined Civil Services (Group 1) Exam 2019 Date Announced: சிவில் சர்வீஸ் தேர்வுகள்!
மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களது வயது வரம்பிலிருந்து 10 ஆண்டுகள் அதிகரிக்கப்படும். யுனிவெர்சிடி கிராண்ட்ஸ் கமிஷன் 1956 ஆல் அங்கீகரிக்கப்பட்ட எந்த பல்கலை.,யிலும் பட்டம் பெற்ற மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
பெல் நிறுவனத்தில் 229 பேருக்கு வேலை வாய்ப்பு... நீங்களும் விண்ணப்பிக்கலாம்!
அடிப்படைத் தேர்வு (பிரிலிமினரி) மார்ச் 3ம் தேதி நடைபெறவுள்ளது. பின்னர் இதில் தேர்வாகியவர்கள் மெயின் தேர்வில் போட்டியிடலாம். இறுதியாக மெயின் தேர்வில் தேர்வானவர்கள் நேர்காணல் மூலம் வேலைக்குத் தேர்வு செய்யப்படுவர். வழக்கம்போல இதற்கு விண்ணப்பிக்கும் பட்டதாரிகளிடையே போட்டி அதிகமாக இருக்கும். முதன்மை தேர்வுகள் சென்னையில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.