TNPSC Group 2, 2A Exam: குரூப் 2 தேர்வில் 645 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வு; 645 பணியிடங்கள்; எந்தெந்த பதவிகளில் எவ்வளவு காலியிடங்கள்? எந்தப் பதவிக்கு என்ன கல்வித் தகுதி? விண்ணப்பிப்பது எப்படி? முழுமையான விவரம் இங்கே

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வு; 645 பணியிடங்கள்; எந்தெந்த பதவிகளில் எவ்வளவு காலியிடங்கள்? எந்தப் பதவிக்கு என்ன கல்வித் தகுதி? விண்ணப்பிப்பது எப்படி? முழுமையான விவரம் இங்கே

author-image
WebDesk
New Update
TNPSC Group 2  Group 2A vaccancies increased to 213 Tamil News

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு இன்று (ஜூலை 15) முதல் தொடங்குகிறது.

Advertisment

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள இரண்டாம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2ஏ தேர்வை அறிவித்துள்ளது. மொத்தம் 645 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் நேர்முகத் தேர்வு அடங்கிய 50 பணியிடங்களும், நேர்முகத் தேர்வு அல்லாத 595 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வுக்கு 13.08.2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நேர்முகத் தேர்வு பதவிகள் (குரூப் 2)

உதவி ஆய்வாளர்

Advertisment
Advertisements

காலியிடங்களின் எண்ணிக்கை: 6

கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் சமூகப் பணியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை 18

இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: நிலை 18

நன்னடத்தை அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். உளவியல் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

சம்பளம்: நிலை 18

சார் பதிவாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 6

கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை 18

தனிப்பிரிவு உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 8

கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை 18

உதவிப் பிரிவு அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இளநிலை சட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை 16

வனவர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 22

கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: நிலை 16

நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள் (குரூப் 2ஏ)

முதுநிலை ஆய்வாளர் (கூட்டுறவு)

காலியிடங்களின் எண்ணிக்கை: 65

கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: நிலை 12

உதவி ஆய்வாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: நிலை 12

தணிக்கை ஆய்வாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 11

கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: நிலை 12

மேற்பார்வையாளர்/ இளநிலைக் கண்காணிப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: நிலை 11

உதவியாளர் நிலை III

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: நிலை 10

உதவியாளர் 

காலியிடங்களின் எண்ணிக்கை: 460

(பல்வேறு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் உதவியாளர்கள்)

கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: நிலை 10, நிலை 9

முதுநிலை வருவாய் ஆய்வாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 40

கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: நிலை 10

செயல் அலுவலர் (இந்து சமய அறநிலையத் துறை)

காலியிடங்களின் எண்ணிக்கை: 11

கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: நிலை 10

கீழ்நிலை செயலிட எழுத்தர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 

சம்பளம்: நிலை 9

வயது வரம்பு: 01.07.2025 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு. சில பணிகளுக்கு வயது வரம்பு வேறுபடும்.

தேர்வு முறை: குரூப் 2 பதவிகளுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகதேர்வு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும். குரூப் 2 ஏ பதவிகளுக்கு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும். முதல்நிலைத் தேர்வு இரண்டு பதவிகளுக்கும் ஒன்றாக நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வு என்பது முதன்மைத் தேர்வுக்கான தகுதித் தேர்வு மட்டுமே.

முதல்நிலைத் தேர்வு மூன்று பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், 2 ஆம் பகுதியில் திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெறும். மூன்றாம் பகுதியில் தமிழ் அல்லது ஆங்கில பாடத்திலிருந்து 100 வினாக்கள் இடம்பெறும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். தேர்வு 3 மணி நேரம் நடைபெறும். தேர்வு நடைபெறும் நாள்: 28.09.2025

குரூப் 2 பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு

இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதித் தேர்வு. 3 மணி நேரத்திற்கு 100 மதிப்பெண்களுக்கு விரிந்துரைக்கும் வகையில் நடைபெறும். இரண்டாம் தாள் பொது அறிவு. 3 மணி நேரத்திற்கு 300 மதிப்பெண்களுக்கு விரிந்துரைக்கும் வகையில் நடைபெறும். பொது அறிவு பகுதியில் எடுக்கும் மதிப்பெண்கள் இறுதித் தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

குரூப் 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு

இரண்டு தாள்களாக நடைபெறும். முதல் தாள் தமிழ் மொழித் தகுதித் தேர்வு. 3 மணி நேரத்திற்கு 100 மதிப்பெண்களுக்கு விரிந்துரைக்கும் வகையில் நடைபெறும். இரண்டாம் தாளில் பொது அறிவில் 100 வினாக்கள், திறனறியில் 40 வினாக்கள், தமிழ் அல்லது ஆங்கில பாடத்தில் 60 வினாக்கள் என 200 வினாக்களுக்கு நடைபெறும். 3 மணி நேரத்திற்கு 300 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகையில் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வுக் கட்டணம்: ரூ. 100, இருப்பினும் SC, SC(A), ST மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். 

ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், தங்களது கல்வி மற்றும் பிறச் சான்றிதழ்களை கையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.08.2025

இந்த வேலை வாய்ப்பு குறித்து மேலும் விவரங்கள் அறிய https://tnpsc.gov.in/Document/tamil/GRP2_11_2025_TAMIL.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

Tnpsc Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: