/tamil-ie/media/media_files/uploads/2022/05/tnpsc-exam-announced-1.jpg)
டி.என்.பி.எஸ்.சி தேர்வர்கள் ஆவலுடன் காத்திருந்த குரூப் 2, 2ஏ பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதனை எவ்வாறு தெரிந்துக் கொள்வது என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வை மே 21 ஆம் தேதி நடத்தியது. அப்போது முதல்நிலைத் தேர்வு முடிவுகள் ஜூன் இறுதியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இடஒதுக்கீடு வழக்கு காரணமாக தாமதமானது. தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் அதற்கேற்றாற்போல் மாற்றங்கள் செய்யப்பட்டு, மென்பொருள் மாற்றமும் செய்யப்பட்டது. இருப்பினும் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால் தேர்வர்கள் கவலையடைந்து இருந்தனர்.
இதையும் படியுங்கள்: தமிழக அரசு வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!
இந்தநிலையில், கடந்த சில நாட்களாக இந்த வாரத்திற்குள் ரிசல்ட் வெளியாகும் என்ற தகவல்கள் வெளிவந்தன. அதன்படி இன்று குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
குரூப் 2 ரிசல்ட் செக் செய்வது எப்படி?
தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ள முதலில் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான https://www.tnpsc.gov.in/ என்ற பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
முகப்பு பக்கத்தில் latest results என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அங்கு Combined civil services examinations – II என்பதை கிளிக் செய்தால், புதிய பக்கத்தில் முடிவுகள் காண்பிக்கப்படும்.
அதில் உங்கள் பதிவெண் கொண்டு உங்கள் முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.