/tamil-ie/media/media_files/uploads/2023/03/tnpsc.jpg)
TNPSC Group 2 Exam 2024: டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் வருகின்ற டிசம்பர் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள இரண்டாம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வை நேற்று (செப்டம்பர் 14) நடத்தியது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 2327 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் நேர்முகத் தேர்வு அடங்கிய 507 பணியிடங்களும், நேர்முகத் தேர்வு அல்லாத 1820 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
குரூப் 2 முதல்நிலைத் தேர்வுக்கு 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில், 5.81 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதியுள்ளனர். அதாவது வருகை சதவிகிதம் 73.22% ஆக உள்ளது.
இந்தக் குரூப் 2 முதல்நிலைத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெற்றது. முதல் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெற்றன. இரண்டாம் பகுதி மொழிப் பாடப்பகுதி. இதில் தமிழ் அல்லது ஆங்கில பாடத்தில் இருந்து 100 கேள்விகள் இடம்பெற்றன.
இந்த குரூப் 2 தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பு செப்டம்பர் 23 ஆம் தேதி தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டது.
இந்தநிலையில், குரூப் 2 முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் வருகின்ற டிசம்பர் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. மேலும் முதன்மைத் தேர்வுகள் 2025 பிப்ரவரி மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
குரூப் 2 தேர்வு முடிவுகள் விரைவாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Combined Civil Services Examination II (Group II and IIA Services)
— TNPSC (@TNPSC_Office) September 26, 2024
Notification No: 08/2024
Tentative Month of Publication of Result: December 2024
Tentative Month of Main Examination: February 2025
For updates regarding the selection process, check the Selection Schedule in… pic.twitter.com/NPkcs3ODy3
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.