டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுகளுக்கான மாற்றியமைக்கப்ப்பட்ட புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை டவுன்லோட் செய்வது எப்படி என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் வருடாந்திர அட்டவணை வெளியிடப்படும். இருப்பினும் அவ்வப்போது இந்த அட்டவணை மற்றும் தேர்வு நடைமுறைகள் தேவைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும்.
அந்த வகையில் சமீபத்தில் குரூப் 2, 2ஏ தேர்வுக்கான முதன்மைத் தேர்வு நடைமுறை மாற்றப்பட்டது. அதன்படி குரூப் 2 தேர்வுகளுக்கு முதன்மைத் தேர்வில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு மற்றும் பொது அறிவு தொடர்பான விரிவான விடையளிக்கும் எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதேநேரம், குரூப் 2ஏ தேர்வுகளுக்கு தமிழ் மொழித் தகுதித் தேர்வு மற்றும் கொள்குறி வகைத் தேர்வு நடைபெறும். இந்தத் தேர்வு முதல்நிலைத் தேர்வு போன்றே இருக்கும். தமிழ் பாடத்தில் 100 கேள்விகள் இடம்பெறும். இருப்பினும் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கு முதல்நிலைத் தேர்வு ஒரே தேர்வாக நடைபெறும்.
இந்தநிலையில் குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டம் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பாடத்திட்டத்தை டவுன்லோட் செய்ய தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான https://www.tnpsc.gov.in/ என்ற இணையப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும். அதில் ஆட்சேர்ப்பு என்ற மெனுவில் சிலபஸ் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
புதிய பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டம் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகளுக்கு நேராக உள்ள டவுன்லோட் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
இப்போது புதிய பக்கத்தில் பாடத்திட்டம் காண்பிக்கப்படும். இதனை பதிவிறக்கம் செய்து, தேவைப்படின் பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“