டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2A தேர்வு எழுதி, ரிசல்ட்க்காக காத்திருப்பவர்களுக்கும் தேர்வாணையம் நம்பிக்கை அளிக்கும் செய்தியை அறிவித்துள்ளது. அது என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வை மே 21 ஆம் தேதி நடத்தியது. அப்போது முதல்நிலைத் தேர்வு முடிவுகள் ஜூன் இறுதியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆகஸ்டில் வெளியிடப்படவில்லை. அதன்பின்னர் செப்டம்பர் இறுதியில் வெளியாகலாம் என கூறப்பட்டு, பின்னர் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.
இதையும் படியுங்கள்: Repco Bank Jobs: ரெப்கோ வங்கி கிளர்க் வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!
இதனிடையே, பெண்களுக்கான 30% இடஒதுக்கீட்டு முறை தொடர்பான வழக்கின் காரணமாக குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. தற்போது தீர்ப்பு அறிவிக்கப்பட்டு, ஒரு மாதங்களுக்கு மேலாகும் நிலையில், தீர்ப்புக்கு ஏற்றவாறு தேர்வாணைய முடிவுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்தப் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து தேர்வு முடிவுகள் தயாராக உள்ளதாக நிபுணர்களால் கூறப்படுகிறது.
இந்தநிலையில், சில தேர்வர்கள் தேர்வாணையத்தை தொடர்புகொண்டபோது குரூப் 2 தேர்வு முடிவுகள் இன்னும் ஒரு வாரத்திற்குள், அதாவது நவம்பர் 2 ஆவது வாரத்தில் வரும் என்று தெரிவித்ததாக கூறுகின்றனர். மேலும், ஒரே வாரத்தில் 4 தேர்வுகளுக்கான முடிவுகளை தேர்வாணையம் அறிவித்துள்ளது, எனவே விரைவில் பல்வேறு தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்படலாம் என்று தேர்வாணைய தரப்பில் கூறியதாக கூறப்படுப்படுகிறது.
இதனால், குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகளும், குரூப் 2 தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து வெளியிடப்படலாம் என சில தேர்வர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
எப்படியும், இன்னும் ஒரு வாரத்திற்குள் நிச்சயம் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என நிபுணர்களும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இதனையடுத்து மகிழ்ச்சி அடைந்துள்ள தேர்வர்கள், இரண்டு தேர்வு முடிவுகளையும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil