தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கான போட்டித் தேர்வுகள், நேர்காணல் தேர்வுகளை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) நடத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று, 2022-ம் ஆண்டிற்கான பணி நியமனங்கள், போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த திட்ட அறிக்கையை, டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டார்.
அதன்படி, குரூப் 2, குரூப் 2a தேர்வுக்கான அறிப்பாணை பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்றும், குரூப் 2 -ஏ மொத்தம் 5,831 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 2 இன் கீழ் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பதாரர்களை முதல் கட்ட தேர்வு (Preliminary Examination) , இறுதி தேர்வு (Main Written Examination), மற்றும் நேர்காணல் (Interview) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது
பதவிகள் விவரம்
நேர்முகத் தேர்வு கொண்ட குரூப் 2 தேர்வின்கீழ் நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அதிகாரி, சார் பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் உட்பட பல்வேறு பதவிகள் வருகின்றன.
அதே சமயம், அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், நேர்முக எழுத்தர், தலைமை செயலகம் மற்றும் டிஎன்பிஎஸ்சியில் தனிப்பட்ட எழுத்தர் போன்ற பணியிடங்கள் குரூப்-2-ஏ தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி
குரூப் 2 , 2ஏ தேர்வு விண்ணப்பித்தார்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சமாக ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும்.
இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
அதேசமயம், குரூப் 2 , 2ஏ தேர்வுக்கான கல்வித் தகுதி பதவிக்கு ஏற்ப மாறுபடும். எடுத்துக்காட்டுக்கு, தனிப்பட்ட எழுத்தர் பதவிக்கு விண்ணப்பிக்க தட்டச்சு முடித்திருக்க வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.